போர் தொழில் - இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிழல்கள் ரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சமீர் நாயர் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
சுவாரஸ்யமான கிரைம் & திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சரங் எடிட்டிங் செய்துள்ளார்.
போர் தொழில் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 ஜூன் 09ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
போர் தொழில் திரைப்படத்தின் கதை
திருச்சி நெடுஞ்சாலையில் ஒரு பெண் கொடூரமாக கொல்லப்பட்டு கிடக்கிறாள். அந்த கொலை வழக்கை விசாரிக்கும் உள்ளூர் போலீஸாரால் இந்த வழக்கை சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்காக உருவாக்கும் ஸ்பெஷல் டீமில் அனுபவம் வாய்ந்த போலீஸ் அதிகாரி எஸ்.பி. லோகநாத்திடம் (சரத்குமார்) இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அவரது டீமில் புதிதாக இணைந்துள்ள அனுபவமே இல்லாமல் படிப்பு அறிவை மட்டுமே கொண்டுள்ள பிரகாஷ் (அசோக் செல்வன்) மற்றும் அனுபவம் வாய்ந்த லோகநாத் இருவரும் எப்படி அந்த சீரியல் கில்லரை கண்டு பிடிக்கின்றனர் என்கிற விசாரணை கதையை விறுவிறுப்பாக சொல்லி இருக்கும் படம் தான் இந்த போர் தொழில்.