twitter
    Tamil»Movies»Puppy»Story

    பப்பி கதை

    பப்பி இயக்குனர் நட்டு தேவ் (முரட்டு சிங்கள்) இயக்கத்தில் வருண், யோகிபாபு, சம்யுக்த ஹெட்ஜ் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் டர்.இஷரி கே கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் தரேன் குமார் இசையமைத்துள்ளார்.

    நகைச்சுவை மற்றும் அடல்ட் ரீதியாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி ஒளிப்பதிவில் படத்தொகுப்பாளர் ரிச்சி எடிட்டிங் பணிசெய்துள்ளார்.

    பப்பி திரைப்படத்தினை பற்றிய தகவல்கள்

    இப்படத்தின் நாயகனான வருண், பிரபல தயாரிப்பாளரின் மகன் ஆவார், தயாரிப்பாளர் இஷரி கே கணேஷ் தயாரிப்பில் உருவான கோமாளி படத்தில் இப்படத்தின் நாயகன், நாயகி இருவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    பப்பி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019 ஆகஸ்ட் 13-ல் இணையத்தளத்தில் நடிகர் ஆர் ஜே பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.

    இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் வருண் மற்றும் யோகிபாபு அமர்ந்திருக்கும் இருக்கையின் அருகில் உள்ள ஒரு சுவற்றில் ஆபாச நடிகர் ஜாண்ணி சீன்ஸ் மற்றொரு பக்கத்தில் சுவாமி நித்யானந்தா புகைப்படம் சுவற்றில் பதித்திருந்தது பல விமர்சனங்களுக்கு உள்ளானது.
    **Note:Hey! Would you like to share the story of the movie பப்பி with us? Please send it to us ([email protected]).