புஷ்பா (தி ரூல்) - இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இப்படமானது 2021 ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற 'புஷ்பா (தி ரைஸ்)' திரைப்படத்தின் தொடர்ச்சி கதையில் உருவாகியுள்ள படமாகும்.
புஷ்பா (தி ரூல்) படத்தினை முதல் பாகத்தினை தொடர்ந்து தயாரிப்பாளர் நவீன் மற்றும் ரவி ஷங்கர் இணைந்து மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வெளியீடு
இந்த படம் டிசம்பர் 5, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.