twitter
    Tamil»Movies»Darbar»Story

    தர்பார் கதை

    தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது லைக்கா ப்ரொடக்ஷன் என்னும் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    தமிழ் ரசிகர்கள் அனைவரும் குடும்பங்களோடு ரசிக்கும் நோக்கத்தோடு அதிரடி மற்றும் குடும்பக்கதையாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இப்படத்திற்கு எடிட்டிங் பனி செய்துள்ளார்.


    தர்பார் படத்தின் கதை

    மும்பையில் போலீஸ் அதிகாரிகளை மதிக்காமல் ரௌடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. ரௌடிகளால் ஒரு காவலர் அலுவலகம் எரிக்கப்படுகிறது, இதனால் மக்கள் இடையே போலீஸ் மேலுள்ள நம்பிக்கை முற்றிலும் குறைகிறது, இதனை தொடர்ந்து பல காவலர்கள் தனது பணியை விட்டுச்செல்கிறார்கள்.

    மும்பை ரௌடிகளை அடக்குவதற்கு, டெல்லியில் யாருக்கும் அஞ்சாமல் பல ரௌடிகளை என்கவுண்டர் மூலம் அழித்து வரும் ஆதித்ய அருணாச்சலம் (ரஜினி)-யை மும்பைக்கு பணிமாற்றம் செய்கின்றனர். இவரை பணிமாற்றம் செய்யும் சில அரசியல் தலைவர்களும் மேல் அதிகாரிகளும் இவருக்கு மூன்று கண்டிஷன்கள் போடப்பட்டு அதன் அடிப்படையில் மும்பைக்கு போலீஸ் கமிஷனோராக பணிமாற்றம் செய்கின்றனர்.

    ரஜினி பதவியேற்றதும் ஒரு மும்பை அரசியல்வாதியின் மகனை ரௌடிகளிடமிருந்து காப்பாற்றுகிறார். பின்னர் விபச்சாரத்திற்கு கடத்தப்படும் பெண்களையும் அவர்களிடம் இருந்து காப்பாற்றும் ரஜினி இதனால் பல ரௌடிகளை அசுரனை போல் அடிக்கிறார். ரஜினியின் இந்த நடவடிக்கையை எதிர்த்து மனித உரிமை குழு இவரை கண்டிக்கிறது. ஆனால் ரஜினி மனித உரிமை அதிகாரிகளையும் மிரட்டுகிறார்.

    ரஜினி பதவியேற்ற சில நாட்களிலையே மும்பையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார். பின்னர் அங்கு நடக்கும் குற்றங்களுக்கு முக்கிய புள்ளியாக மும்பையில் ஒரு பிரபல தொழிலதிபரின் மகன் என்று கண்டறியும் ரஜினி, அவரை கைதி செய்கிறார். தனது மகனை காப்பாற்ற அந்த தொழிலதிபர் பல முயற்சிகள் எடுத்து வருகின்றார். அந்த தொழிலதிபரின் எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும், ஆதிக்கத்துக்கும் ஆஞ்சாமல் ரஜினி அவர் பிடியில் இருக்கும் அந்த நபரை வெளியிடாமல் எதிர்க்கிறார்.

    பின்னர் சில சூழ்ச்சிகள் செய்து அந்த தொழிலதிபரின் மகனை வெளியில் எடுத்து அவனை வெளிநாட்டிற்கு அனுப்பிவைக்கிறார் அந்த தொழிலதிபர். ஆனால் ரஜினி அவர்களின் சூழ்ச்சியை யூகித்து அந்த தொழிலதிபரின் மகனை தனது தந்திரத்தால் கொல்கிறார்.

    இறந்தது தொழிலதிபரின் வளர்ப்பு மகன் என்றும், உலகளவில் போதை மருந்து கடத்தல் செய்து வரும் சுனில் ஷெட்டியின் மகன் என்றும், ரஜினிக்கு பின்னர் தெரியவருகிறது. சுனில் ஷெட்டி பல ஆண்டுகளுக்கு முன்னர் மும்பை கலக்கி வந்துள்ள பிரபல ரௌடி, இவர் போலீஸ் அதிகாரிகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் பலரை கொன்று குவித்தவர்.

    சுனில் ஷெட்டி தனது மகனை கொன்ற ரஜினியை பழிவாங்க ரஜினியையும், அவரது மகளையும் குறிவைக்கிறார். அதிலிருந்து ரஜினி எவ்வாறு தப்பித்து, தனது மகளை காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் சுவாரசிய மிகுந்த திரைக்கதை.

    தர்பார் திரைப்படத்தினை பற்றிய பிரத்தியேக தகவல்கள்

    இப்படத்தின் நாயகன் ஆகிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைவாழ்வில் இப்படமானது இவரின் 167வது திரைப்படம் ஆகும். 'தலைவர் 167' என்னும் தாற்காலிய பெயரினை கொண்டு அழைக்கப்பட்ட இப்படம் பின்னர் தர்பார் என்னும் பெயரினை பெற்றுள்ளது. 2018ல் வெளியாகி இந்தியாவில் வசூல் சாதனை படைத்துள்ள ரஜினியின் 2.0 படத்திற்கு பின்னர் லைக்கா நிறுவனம் ரஜினியுடன் கூட்டணி அமைத்து இப்படத்தினை தயாரித்துள்ளது.

    தர்பார் படத்திற்கு வில்லனாக கன்னட திரைப்பட முன்னணி நடிகர் சுனில் ஷெட்டி நடித்துள்ளார். இவர் 2001ம் ஆண்டு வெளியான 12பி படத்தில் நடித்துள்ளார். அப்படத்திற்கு பின்னர் தர்பார் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

    அதிரடி மற்றும் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் ரஜினி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் 1992ம் ஆண்டு "பாண்டியன்" படத்தில் காவலர் கதாபாத்திரம் ஏற்று நடித்ததை தொடர்ந்து 27 வருடங்கள் கழித்து இப்படத்தில் நடித்துள்ளார்.

    அனிருத்தின் தொடர் மியூசிக் ஆல்பம் வெற்றியிலும், இயக்குனர் முருகதாஸின் தொடர் வெற்றி என தமிழ் முன்னணி பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும்,  எதிர்பார்ப்புகளும் அதிகரித்தே உள்ளது.

    தர்பார் திரைப்படத்தின் ரிலீஸ் மற்றும் அறிவிப்புகள்

    தர்பார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019-ம் ஆண்டில் மார்ச் 9-ல் வெளியானது, அன்றே இத்திரைப்படமானது 2020-ம் ஆண்டில் திரைக்குவரவுள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2019 அக்டோபர் மாதம் 3ல் முடிந்துள்ளதை தொடர்ந்து இத்திரைப்படத்தின் எடிட்டிங் மற்றும் டப்பிங் பணிகள் நிறைவுபெற்று இத்திரைப்படம் 2020 ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் 2019 நவம்பர் 7ல் கமல்ஹாசன் பிறந்தநாள் முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் அவரது இணையதள ட்விட்டர் பக்கத்தின் மூலம் இப்படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளார். மேலும் இத்திரைப்படம் இந்திய முழுவதும் பல மொழிகளில் உருவாக்கப்பட்டு திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் மோஷன் போஸ்ட்டரினை தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் மோகன்லால் மற்றும் ஹிந்தி மொழியில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இப்படத்தினை ப்ரோமோஷன் செய்துள்ளனர்.

    இப்படத்தின் 'சும்மா கிழி' பாடல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவு பெற்று பிரபலமாகியுள்ளது. இப்பாடலை தொடர்ந்து இப்படத்தின் பாடல்களும் பிரமாண்டமாக வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இப்படம் 2020 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்படத்தினை ஜனவரி 9ல் வெளியிட்டுள்ளனர் தர்பார் படத்தின் படக்குழு.
    **Note:Hey! Would you like to share the story of the movie தர்பார் with us? Please send it to us ([email protected]).