ராயர் பரம்பரை இயக்குனர் ராம்நாத் இயக்கத்தில் கிருஷ்ணா, சரண்யா ஆர் நாயர், மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், கே ஆர் விஜயா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் நகைச்சுவை - காதல் திரைக்கதையில் உருவாகியுள்ள திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சின்னசாமி மௌனகுரு தனது 'சின்னசாமி சினி கிரியேஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை, காதல் என ஒரு கலகலப்பான திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் சசி குமார் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் கோவையில் பொள்ளாச்சி மற்றும் அதனை சார்ந்த கிராம பகுதிகளில் படமாக்கப்பட்டு வெளியாகிறது.
ராயர் பரம்பரை திரைப்படத்தின் கதை
கதைக்கரு: பொள்ளாச்சியில் உள்ள நாயகன் கிருஷ்ணன், சில காரணங்களால் பெண்களையும், காதலர்களும் வெறுத்து காதலிக்கும் ஜோடிகளை பிரித்து வருகிறார். பொழுதுபோக்கிற்காக காதலர்களை நகைச்சுவை வண்ணத்தில் பிரிக்கும் இவர் நாயகியின் மேல் காதல் வயப்பட்டு இவர்கள் சேருவதை படத்தினை கதை.