ரோமியோ - இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆன்டனி, மிர்னாலினி ரவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் - நகைச்சுவை திரைப்படம். இப்படத்தின் நாயகன் விஜய் ஆன்டனி ரோமியோ படத்தில் தயாரிப்பாளராக 'விஜய் ஆன்டனி பிலிம் கார்பரேஷன்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையமைத்துள்ளார்.
காதல் - நகைச்சுவை மற்றும் குடும்ப படமாக அமைந்துள்ள ரோமியோ படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக இப்படத்தின் நாயகன் விஜய் ஆன்டனி எடிட்டிங் செய்துள்ளார்.
ரோமியோ திரைப்படத்தில் விஜய் ஆன்டனி நாயகனாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் மற்றும் படத்தொகுப்பாளர் என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, யோகி பாபு என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரோமியோ திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஏப்ரல் 11ல் தமிழ் & தெலுங்கு இருமொழியில் உருவாகி உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
ரோமியோ திரைப்படத்தின் கதை
கதைக்கரு - பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக திருமணத்திற்கு சம்மதம் சொல்லும் நாயகி மிர்னாலினி ரவி, நாயகன் விஜய் ஆன்டனியின் அப்பாவித்தனத்தை உபயோகித்து திருமணம் செய்து கொள்கிறார். மிர்னாலியை திருமணத்திற்கு காதலிக்க தொடங்கும் நாயகன் தனது ஆசைப்படி நாயகியுடன் இணைந்தாரா இல்லையா என்பது தான் ரோமியோ படத்தின் கதைக்கரு.
மலேசியாவில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊர் திரும்பும் 35 வயது நபரான விஜய் ஆண்டனிக்கு நடிகையாக ஆசைப்படும் மிருணாளினி ரவியை திருமணம் செய்து வைக்கின்றனர். விருப்பமில்லாமல் திருமணம் செய்துக் கொள்ளும் மிருணாளினி ரவி விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். மனைவியை ஒரு தலையாக காதலிக்கத் தொடங்கும் விஜய் ஆண்டனி மனைவிக்கு பிடித்தவராக மாற முயற்சி செய்வதும் இறுதியில் என்ன ஆனது என்பதும் தான் இந்த படத்தின் கதை.