ரன் பேபி ரன் - இயக்குனர் ஜியென் கிருஷ்ணாகுமார் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
அதிரடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் யுவா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மதன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தின் நாயகன் ஆர் ஜே பாலாஜியின் திரைவாழ்வில் இவர் நடிக்கும் முதல் ஆக்ஷன் திரைப்படமாகும், ரன் பேபி ரன்.
ரன் பேபி ரன் திரைப்படம் 2023, பிப்ரவரி 03ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.