சண்டகோழி 2 தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படம் 2005-ம் ஆண்டு வெளிவந்த சண்டகோழி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க, விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
கதை :
கோயில் திருவிழாவை பிரச்சினையின்றி நடத்தி முடிக்க பல பேரை அடித்து துவம்சம் செய்யும் நாயகனே இந்த சண்டக்கோழி 2.
இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதலில் பல உயிர்கள் பலியாக, ஏழு ஆண்டுகளாக தடைபட்டு நிற்கிறது வேட்டை கருப்பன் கோயில் திருவிழா. அதை மீண்டும் நடத்த ஏழு ஊர்க்காரர்களையும் அழைத்து பஞ்சாயத்து பேசி சத்தியம் வாங்கி, திருவிழாவுக்கு கொடியேற்றுகிறார் அய்யா ராஜ்கிரண். ஆனால் எதிர்கோஷ்டியில் எஞ்சியுள்ள வாரிசை போட்டுத்தள்ளியே தீருவது என துடிக்கிறது மற்றொரு கோஷ்டி. ஆனால் அந்த வாரிசை அடைகாத்து பாதுகாக்கிறார் ராஜ்கிரண். இந்நிலையில் ஊர் திருவிழாவில் பங்கேற்க வெளிநாட்டில் இருந்து திரும்புகிறார் சண்டக்கோழி விஷால். அதில் இருந்து ஆரம்பிக்கிறது ஆடு புலி ஆட்டம். புலி ஆட்டை கொன்றதா என்பதே படம்.