X
தமிழ் » திரைப்படங்கள் » சண்டகோழி 2
சண்டகோழி 2

சண்டகோழி 2

Action | 18 Oct 2018 | U/A | 149 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

சண்டகோழி 2 கதை

சண்டகோழி 2 தமிழ் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படம் 2005-ம் ஆண்டு வெளிவந்த சண்டகோழி திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இத்திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க, விஷால் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. கதை :  கோயில் திருவிழாவை பிரச்சினையின்றி நடத்தி முடிக்க பல பேரை அடித்து துவம்சம் செய்யும் நாயகனே இந்த சண்டக்கோழி 2. இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதலில் பல உயிர்கள் பலியாக, ஏழு ஆண்டுகளாக தடைபட்டு நிற்கிறது வேட்டை கருப்பன் கோயில் திருவிழா. அதை மீண்டும் நடத்த ஏழு ஊர்க்காரர்களையும் அழைத்து பஞ்சாயத்து பேசி சத்தியம் வாங்கி, திருவிழாவுக்கு கொடியேற்றுகிறார் அய்யா ராஜ்கிரண். ஆனால் எதிர்கோஷ்டியில் எஞ்சியுள்ள வாரிசை போட்டுத்தள்ளியே தீருவது என துடிக்கிறது மற்றொரு கோஷ்டி. ஆனால் அந்த வாரிசை அடைகாத்து பாதுகாக்கிறார் ராஜ்கிரண். இந்நிலையில் ஊர் திருவிழாவில் பங்கேற்க வெளிநாட்டில் இருந்து திரும்புகிறார் சண்டக்கோழி விஷால். அதில் இருந்து ஆரம்பிக்கிறது ஆடு புலி ஆட்டம். புலி ஆட்டை கொன்றதா என்பதே படம்.
Read More

சண்டகோழி 2 நடிகர்கள் & படக்குழுவினர்

சண்டகோழி 2 அணியின் தகவல்

இயக்குனர் லிங்குசாமி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் விஷால் கிருஷ்ணா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சண்டகோழி 2 விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே பயணிக்கிறது கதை. அதை உறுத்தலில்லாமல் கச்சிதமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி. தன்னுடைய வழக்கமான விறுவிறு திரைக்கதையால் காட்சிகளை நகர்த்தி அசத்தி இருக்கிறார். 13 ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே சண்டக்கோழியாக விஷால். எந்த மாற்றமும் இல்லாமல் தனக்கே உரித்தான ஆக்ஷன் ஏரியாவில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அதிகம் சவுண்ட் கொடுக்காமல் அண்டர்ப்ளே நடிப்பில் ரசிக்க வைக்கிறார். கம்பீரத்துக்கு மறுபெயர் ராஜ்கிரண். முதல் பாகத்தை போலவே இதிலும் மிரள வைக்கிறார். சாந்தமான முகத்தில் அவர் காட்டும் அதிரடி ரியாக்ஷன்களும், நல்லி எலும்பை நறுக்கென கடிப்பதும் என அதிர வைக்கிறார். என் ராசாவின் மனசிலேல ஆரம்பிச்சு, இப்ப வரைக்கும் இந்த நல்லி எலும்பைக் கடிக்கிறத விட மாட்ரீங்களே சார் கிராமத்து தேவதையாக கீர்த்தி சுரேஷ். 'யோவ் போயா போயா' என சொல்லும் கம்பத்து பொண்ணுக்கு ஆயிரம் லைக்ஸ். காட்டன் ஹாப் சாரியில் அழகோ அழகு கீர்த்தி. பார்வையிலேயே பயமுறுத்துகிறார் வரலட்சுமி. ஒரு சில காட்சிகளில் காஞ்சனா சரத்குமாரின் சாயல் தெரிகிறது. முதல் சில காட்சிகளில் பயமுறுத்தும் வரு, அடுத்தடுத்த காட்சிகளில் வசனம் மட்டுமே பேசி பயத்தை போக்குகிறார். பில்டப் வசனங்கள் வரும் போதெல்லாம், அவர்களாகவே அதை காலி செய்கிறார்கள். அதைத்தவிர பிருந்தாசாரதி, எஸ்.ராவின் வசனங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. முதல் பாகத்தில் சண்டக்கோழியாக இருந்த விஷால் இந்த படத்தில் சமாதான புறாவாக மாறியிருக்கிறார்.

சண்டகோழி 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சண்டகோழி 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+