twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷால் நீதிமன்றத்தில் ஆஜரானது ஏன்? வழக்கறிஞர் விளக்கம்

    |

    Recommended Video

    வரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்- வீடியோ

    சென்னை: நடிகர் விஷால் நீதிமன்றத்திற்கு சென்றதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

    இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்துள்ள சண்டக்கோழி 2 திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

    Actor Vishal appears in court!

    இந்த நிலையில் நேற்று காலை விஷால் அவசர அவசரமாக நீதிமன்றத்திற்கு வந்தார்.

    இது தொடர்பாக விஷால் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. விஷால் தரப்பு வழக்கறிஞர்கள் சார்லஸ் டார்வின் மற்றும் பிரவீன்குமார் பத்திரிகையாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் விளக்கமளித்துள்ளனர்.

    ['அடிச்சுக்கூட கேட்பாங்க... எதையும் சொல்லிடாதீங்க'... விஷால், லிங்குசாமி கோரிக்கை!]

    நேற்று காலை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரான நடிகர் விஷால் புகாரைப் பெற்றுக் கொண்டார். வரிப் பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தில் அப்பியரானார் என்றும் அதில் எவ்வளவு தொகை என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக ஏற்கனவே விஷால் தரப்பிலிருந்து ஒருவர் ஆஜராக விளக்கமளித்திருந்தார் எனவும், ஆனால் நீதிபதிகள் முன்பாக விஷால் ஆஜராகாததால் நேரில் வந்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். நீதிபதிகளின் முன்பாக அக்டோபர் 12ஆம் தேதிக்கு முன்பே விஷால் ஆஜராகியிருக்க வேண்டுமாம்.

    English summary
    Actor Vishal’s Advocates explained about his appearance in court.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X