சத்தமின்றி முத்தம் தா - இயக்குனர் ராஜ் தேவ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், பிரியங்கா திம்மெஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ளார்.
சத்தமின்றி முத்தம் தா திரைப்படத்தின் கதை
சந்தியாவை (பிரியங்கா திமேஷ்) கொலையாளியிடம் இருந்து தப்பிக்க முயலும் போது, கொலையாளியின் கூட்டாளி ஓட்டிச் சென்ற வாகனம் அவள் மீது மோதுகிறது. அதில் சந்தியாவின் கணவர் ரகு (ஸ்ரீகாந்த்) அவளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கிறார். விபத்தில் தலையில் அடிபட்டதால் தன் நினைவை இழந்து தன் கணவனைக்கூட அடையாளம் காண முடியாமல் தவிக்கிறாள் சந்தியா.
முதலில் கனது கணவனை நம்ப மறுக்கும் சந்தியா, பள்ளியில் படித்த காலத்திலிருந்தே நாம் காதலர்கள் என ரகு சொல்ல அதை நம்கிறார். ஆனால், பள்ளி ஆல்பத்தை பார்க்கும் சூழ்நிலை வர, அதில் தனது கணவர் ரகு இல்லை என்றும், உண்மையில் கணவரின் பெயர் விக்னேஷ் என்பதும் நினைவுக்கு வருகிறது. சந்தியாவிடம் கணவர் என்று ஸ்ரீகாந்த் ஏன் பொய் சொல்லிவைத்து இருந்தார் இதற்கு காரணம் என்ன என பல திகிலூட்டும் திருப்பங்களுடன் கதை நகர்கிறது.