சில்லு கருப்பட்டி கதை

  சில்லு கருப்பட்டி - ‘பூவரசம் பீப்பீ ‘ என்ற படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில் சமுத்திரக்கனி, சாரா அர்ஜுன், சுனைனா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தினை தயாரிப்பாளர் டிவைன் ப்ரோடுக்ஷன்ஸ் சார்பில் வெங்கடேஷ் வெள்ளினேனி தயாரிக்க இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளளார். இப்படத்தில் நான்கு வெவ்வேறு கதைகள் என நான்கு ஒளிப்பதிவாளர்களை கொண்டு உருவாக்கியுள்ளனர்.

  சில்லு கருப்பட்டி படத்தின் கதை

  இப்படத்தினை நான்கு பாகங்களாக உருவாக்கியுள்ளனர். முதல் பாகத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் உள்ள பெண்ணாக நடிகை சாரா நடித்துள்ளார். தொலைந்து போன அவரது வைர மோதிரத்தை ஒரு குப்பையில் இருந்து எடுத்து அதனை அவரிடம் காதலுடன் தருகிறார் ஒரு குப்பத்து சிறுவன்.

  இரண்டாவது எபிசோடில், கட்டி, கேன்சராகலாம் என்றதும் முழுவதுமாக உடைந்து போகும் மணிகண்டன், இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். அவருடன் காரை ஷேர் பண்ணும் நிவேதிதா சுரேஷ் அத்தனை அழகு. மனக்கஷ்டத்தில் இருக்கிறார் என்பதைத் புரிந்துகொண்டு, அவராகப் பேச்சுக்கொடுத்து, வாழ்க்கை வெறுத்துப் போனவனின் வாழ்வைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்பதும் அதற்கான உரையாடலும் சுகமான ரசனை.

  மூன்றாவது பாகத்தில் தனிமையில் வாழும் வயதானர்வகளின் உணர்ச்சியை பற்றி எடுத்துரைத்துள்ளார் இயக்குனர். 

  நான்காவது பாகத்தில் சுனேனாவும் சமுத்திரக்கனியுமே. மெஷின்போல மூன்று குழந்தைகளைப் பெற்றுவிட்டாலும் அன்புக்கு ஏங்கும் சுனேனா, தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் கணவனுக்கு வகுப்பெடுக்கும் ஆவேசம், தன் உணர்வுகளையும் ஆசைகளையும் புரிய வைக்கும் லாவகம் என இதில் வேறொரு முகம் காட்டுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக மனைவியின் உலகமறிந்து மாறும் கணவர் சமுத்திரக்கனி என நான்கு பாகங்களாக இப்படத்தினை எதார்த்தமான திரைக்கதை கொண்டு இயக்கியுள்ளார் இயக்குனர் ஹலீதா ஷமீம்.

  **Note:Hey! Would you like to share the story of the movie சில்லு கருப்பட்டி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).