twitter

    சிங்காரவேலன் கதை

    சிங்காரவேலன் 1992 -ம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை காதல் திரைப்படம். இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் கமல் ஹாசன், குஷ்பூ, கவுண்டமணி, வடிவேலு, மனோ, மனோரமா, ஜெய்ஷ்ங்கர், நிழல்கள் ரவி, சார்லி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்க, இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 

    இந்த படத்தை ஆர் டி பாஸ்கரின் பாவலர் கிரியேஷன்ஸ் தயாரித்தது. இப்படத்திற்கு பஞ்சு அருணாச்சலம் திரைக்கதை எழுதியுள்ளார். அப்துல் ரஹ்மான் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 1992 -ம் ஆண்டு ஏப்ரல் 13 -ம் நாள் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது. அதோடு, ரகவாலா மொஹப்பத் என்ற பெயரில் ஹிந்தி மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. 

    கதை : 

    கிராமத்தில் தன் தாயுடன் வளர்ந்து வரும் மகனுக்கு, தன் தாய் அவரின் அண்ணனின் மகளை தன் மகனுக்கு மணமுடிப்பேன் என்று சபதம் போட்டிருப்பது தெரிய வருகிறது. தாயின் அண்ணனும், அண்ணியும் விபத்தில் இறக்க, அவர்களை மக்கள் குஷ்பூ சென்னையில் வளர்ந்து வருகிறார். 

    குஷ்பூவின் சிறு வயது புகைப்படத்துடன் சென்னைக்கு வரும் கமல் ஹாசன், நண்பன் மனோவின் வீட்டில் தங்குகிறார். அவர்களுடன் கவுண்டமணி, சார்லி, வடிவேலு ஆகியோரின் உதவியுடன், தன் தாயின் சபதம் நிறைவேற குஷ்பூவை எப்படி கமல் ஹாசன் திருமணம் செய்து கொள்கிறார் எனபது தான் இப்படத்தின் கதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie சிங்காரவேலன் with us? Please send it to us ([email protected]).