சைரன் வீனஸ் ப்ரொடக்ஷன் நிறுவனம் சார்பில் ராஜா ராஜேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் மிலன் மேத்யூ இயக்கியுள்ளார். ‘பீச்சாங்கை’ புகழ் ஆர்.எஸ்.கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, அய்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பிளாக் பாண்டி, மாரிமுத்து, வழக்கு எண் முத்துராமன், ஜி.எம்.சுந்தர், முருகானந்தம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் குணா பாலசுப்ரமணியன் இசையமைத்துள்ளார்.. ஒளிப்பதிவை ரவீந்திரன் மேற்கொள்ள : படத்தொகுப்பை பவன் ஸ்ரீகுமார் கவனிக்கிறார். பின்னணி இசை : அஸ்வமித்ரா, ஸ்டண்ட் : ஓம் பிரகாஷ், கலை: டீ ஜே. வசனம் : சோமசுந்தரம்..
சமீபத்தில் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் பிரஸ்ட் சிங்கள், குணா பாலசுப்ரமணியன் இசையில் மற்றும் மோகன் ராஜா வரிகளில் "நீ மட்டும் போதும்" பாடல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ல் மாலை 6 மணி அளவில் வெளியாகிறது.