X
சைரன்
Action | Crime | Drama | 16 Feb 2024 | U/A | 155 Mins
Tamil

சைரன் கதை

சைரன் இயக்குனர் ஆன்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரைம் - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தனது 'ஹோம் மூவி மேக்கர்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் மற்றும் இசையமைப்பாளர் சாம் சி எஸ் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

அதிரடி - கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள சைரன் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ் கே ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். நடிகர் ஜெயம் ரவியின் உறவினரான இப்படத்தின் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் 'ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் தயாரித்துள்ள இப்படத்தினை தமிழகம் முழுவதும் பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் & அரசியல்வாதி திரு. உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்துள்ளார்.



சைரன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ள நிலையில், இப்படம் 2024 பிப் மாதம் 16ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

சைரன் படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், இப்படத்தின் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான உரிமையை ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


சைரன் திரைப்படத்தின் கதை

கதைக்கரு: ஒரு கொலை வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு செல்லும் நாயகன் ஜெயம் ரவி, 14 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து தன்னை சூழ்ச்சியில் சிக்க வைத்த குற்றவாளிகளை தேடி பழிவாங்குவது தான் இப்படத்தின் கதைக்கரு.

செய்யாத குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறையில் அடைந்துக் கிடக்கிறார் ஜெயம் ரவி. மாற்றுத்திறனாளியான மனைவி அனுபமா பரமேஸ்வரனின் பிரிவு ஒரு பக்கம், சிறு வயதில் இருந்தே தனது மகளை பார்க்க வேண்டும் என்கிற தவிப்பு ஒரு பக்கம். பரோலில் வெளிவரும் ஜெயம் ரவி போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி எப்படி பழிவாங்குகிறார். ஜெயம் ரவி தான் இதையெல்லாம் செய்கிறார் என சந்தேகப்படும் கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவியை கையும் களவுமாக பிடிக்கிறாரா? இல்லையா? என்பது தான் இந்த சைரன் 108 படத்தின் கதை.

சைரன் தகவல்கள்

சைரன் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, அஜய், அழகம் பெருமாள், சமுத்திரக்கனி என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைக்க, இப்படத்தின் பின்னணி இசைக்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தவிர்த்து நடிகர் ஜெயம் ரவி முன்னணி நாயகனாக நடித்துள்ள பல படங்கள் தோல்வி அடைந்துள்ள நிலையில், தற்போது சைரன் படம் இவரின் திரைப்பயண தோல்வியை மாற்றி அமைக்கும் என பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.

2023 டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தின் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இப்படம் 2024 பிப் மாதம் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+