twitter

    சீதா ராமம் கதை

    சீதா ராமம் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா என பலர் இணைந்து நடித்திருக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை வய்ஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னம் சினிமாஸ் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

    ஒரு அழகான காதல் காவியமான படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் பி எஸ் வினோத் மற்றும் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா இணைந்து ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஸ்வரா ராவ் எடிட்டிங் செய்துள்ளார்.

    2021 ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, ஹைதராபாத், காஷ்மீர் மற்றும் ரஷ்யா இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டு, சீதா ராமம் திரைப்படம் 2022, ஆகஸ்ட் 05ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.

    மகாநதி படத்திற்கு பின் சீதா ராமம் படத்தின் மூலம் துல்கர் தெலுங்கு சினிமாவில் நடித்துள்ளார். இப்படத்தில் மிருணாள் தாகூர் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே மற்றும் ராஸ்மிகா கதாபாத்திரத்தில் ராசி கண்ணா நடிக்க இருந்து, ஆனால் வெவ்வேறு படங்களில் இவர்கள் நடிக்க இருந்ததால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை.



    சீதா ராமம் திரைப்படத்தின் கதை

    கதைக்கரு

    ராமம் (அனாதையாக தனிமையில் வாழும் இளைஞர்) இவர் ராணுவ அதிகாரியாக வேலை செய்து வருகிறார். சீதா என்னும் ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு கடிதம் இவருக்கு வருகிறது. இருவரும் ஒரு கட்டத்தில் சந்தித்து காதலிக்க தொடங்குகின்றனர். ராணுவத்தின் உத்தரவை ஏற்று எதிரி நாட்டிற்கு செல்லும் ராமம் அங்கு சிக்கி விடுகிறார். பின் ராம் - சீதா காதல் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.

    கதை

    முன்னாள் பாகிஸ்தான் ராணுவ தளபதியின் பேத்தி அஃப்ரீன் (ராஷ்மிகா) ஒரு சிக்கலில் சிக்குகிறார். அதிலிருந்து தப்பிக்க தனது தாத்தாவின் ஆசை படி பாகிஸ்தானில் இருந்து இந்திய ராணுவ வீரரான ராம் (துல்கர் சல்மான்) எழுதிய காதல் கடிதத்தை எடுத்துக்கொண்டு இந்தியாவில் உள்ள சீதா மகாலக்ஷ்மி (மிருணாள் தாகூர்) என்பவரை கண்டுபிடித்து துல்கர் எழுதிய காதல் கடிதத்தை கொடுக்க இந்திய வருகிறார். 

    ராஷ்மிகா தனது தாத்தாவின் ஆசை படி அந்த கடிதத்தை சீதாவை கண்டுபிடித்து அவரிடம் சேர்த்தார? இல்லையா? என்பதே தான் படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை. 

    ராமம் (துல்கர் சல்மான்) இந்தியா ராணுவ அதிகாரி, இவர் ஒரு முக்கிய பதவியில் உள்ளார். ஒரு கட்டத்தில் காஷ்மீரில் ஹிந்து - இஸ்லாமிய மக்களுக்கு இடையே நடக்கும் யுத்தத்தை தடுத்து நிறுத்தி பிரபலமாகிறார்.

    இதனை தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்து இவருக்கு பல கடிதங்கள் வருகின்றது. அதில் ஒன்றுதான் சீதா மஹாலக்ஷ்மி கடிதம். சீதா என்னும் பெண்ணுடன் இவருக்கு காதல் மலர்கிறது. சீதாவை பார்க்க செல்லும் இவர், அவருடன் காதலில் விழுகிறார்.

    ராமம் - சீதா இருவரும் காதலிக்கு தொடங்குகின்றனர். பின் என்ன ஆனது? யார் இந்த சீதா? அவர் பின்னணி என்ன? ராணுவத்தின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் செல்லும் ராம் அங்கு சிக்கி விடுகிறார். பின் என்ன ஆனது? ராம் - சீதா சேர்ந்தனரா இல்லையா என்பதே படத்தின் கதை. 

    ஓடிடி

    சீதா ராமம திரைப்படம் 2022, செப்டம்பர் 09ல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகினாலும் ஓடிடி வெளியீட்டிற்கு பின் இப்படம் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
    **Note:Hey! Would you like to share the story of the movie சீதா ராமம் with us? Please send it to us ([email protected]).