சிவப்பு எனக்கு பிடிக்கும் இயக்குனர் யுரேகா இயக்கத்தில், சாண்ட்ரா எமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம்.
இப்படத்தின் கதை, மகிமா (சாண்ட்ரா எமி) என்ற பாலியல் தொழிலாளி தன்னிடம் வந்து சென்ற ஐந்து வாடிக்கையாளர்களை பற்றி எழுத்தாளர் யுரேகாவிடம் பகிர்ந்துக் கொள்கிறார். வந்து செல்லும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும், வெறும் உடல் தேவைக்காக மட்டும் வரவில்லை என்பதையும், அவர்களுக்கு ஒரு மனநல மருத்துவராக செயல்பட்டதை கூறுகிறார்.
பாலியல் வன்முறைகளுக்கு எதிரான, நெஞ்சை உருகவைக்கும் இறுதிகாட்சியும் , சென்னைக்கு சிவப்பு விளக்கு பகுதி வேண்டுமென்ற சர்ச்சையான கோரிக்கையையும் முன் வைக்கிறது “சிவப்பு எனக்கு பிடிக்கும்”.
துளிக்கூட ஆபாசம் இல்லாமல் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தணிக்கை குழுவினராலும், பத்திரிக்கையாளர்களாலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் பாராட்டப்பட்ட ஒரு திரைப்படம்.