X
சூது கவ்வும்
Action | Thriller | 01 May 2013 | U/A |
Tamil

சூது கவ்வும் கதை

சூது கவ்வும் நாளைய இயக்குநர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான நலன் குமாரசாமி என்பவரது இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன், ராதாரவி மற்றும் எம். எஸ். பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மே 1 அன்று வெளிவந்த இந்தத் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பேன்றது. கேரளா மற்றும் மும்பையில் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாக்களில் 'சூது கவ்வும்' படத்தினைத் திரையிட முடிவு செய்திருக்கிறார்கள்.

கதை:

தனக்கென ஒரு கொள்கை வைத்துக் கொண்டு சின்னச் சின்ன கடத்தல் வேலைகளைச் செய்து வருபவர் விஜய் சேதுபதி. அவருடன் 3 இளைஞர்களும் சேர்கிறார்கள். ஒருநாள் ஒரு அமைச்சரின் மகனைக் கடத்தும் அஸைன்மென்ட் வருகிறது. முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டு கடத்துகிறார்கள். அதில் ஒரு திருப்பமாக, கடத்தப்பட்ட அமைச்சர் மகனே இவர்களுடன் பங்காளியாகிறான். ஆனால் கடத்தல் வேன் விபத்துக்குள்ளாகிறது. கடத்தல் திட்டம் கவிழ்ந்துவிடுகிறது. இந்தக் கும்பலைப் பிடிக்க ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி வருகிறார். அவர் துரத்த, இந்த கடத்தல் கும்பல் ஓட.. காமெடியும் விறுவிறுப்பும் கலந்து கட்டிய க்ளைமாக்ஸாக முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+