ஸ்பாட் இயக்குனர் வி ஆர் ஆர் இயக்கத்தில் நாசர் மற்றும் புதுமுக நடிகர்கள் பலர் நடிக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் விஜயசங்கர் இசையமைத்துள்ளார்.
கதை
இத்திரைப்படத்தின் நாயகன் கௌசிக் ஒரு போலீஸ் அதிகாரியின் மகன், இவர் தன்னுடைய பிறந்த நாளை நண்பர்களுடன் பப்பில் கொண்டாடுகிறார். அதே பப்பில் இருக்கும் நாயகி அக்னி பவாரை, வில்லன் நாசர் அவரது அடியாளான கராத்தே கோபாலனை வைத்து, கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
இதை பார்க்கும் கௌசிக், கராத்தே கோபாலனிடம் இருந்து அக்னி பவாரை காப்பாற்றி தன்னுடைய நண்பர்களுடன் காரில் அழைத்து செல்கிறார். இவர்களை துரத்திக் கொண்டு கராத்தே கோபாலனும் செல்கிறார். சென்னையில் இருந்து ஆந்திரா வரை கௌசிக்கின் காரை துரத்திக் கொண்டு கராத்தே கோபாலன் செல்கிறார்.
அக்னி பவாரை கொல்ல தடையாக இருக்கும் கௌசிக்கையும், அவரது நண்பர்களையும் கொலை செய்ய சொல்கிறார் நாசர். ஒரு கட்டத்தில் கௌசிக்கின் கார் டீசல் இல்லாமல் நிற்க, நண்பர்களில் ஒருவர் தனியாக செல்ல, அவரை கராத்தே கோபாலன் கொன்று விடுகிறார்.இதனால் விரக்தியடையும் கௌசிக், கராத்தே கோபாலன் துரத்தும் காரணத்தை அக்னி பவாரிடம் கேட்க, தன்னுடைய வாழ்க்கையில் நடந்தவற்றை அக்னி பவார் விவரிக்கிறார்.
கடைசியில், அக்னி பவாரின் பிரச்சனையை கௌசிக் தீர்த்து வைத்தாரா? அக்னி பவாரை கராத்தே கோபாலன் துரத்த காரணம் என்ன? அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.