twitter

    சுல்தான் கதை

    சுல்தான் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தண்ணா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காதல் மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தங்களின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர் பிக்சார்ஸ் சார்பில் சுல்தான் படத்தினை தயாரிக்கின்றனர். இப்படத்தின் இசை, தமிழ் சினிமா இசையமைப்பாளர் விவேக் சிவா மற்றும் மெர்வின் ஸோலோமன் இசையமைத்துள்ளனர்.




    சுல்தான் திரைப்படத்தில் நெப்போலியன், லால், யோகி பாபு, பொன்வண்ணன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். குடும்பங்கள் கண்டு ரசிக்கும் ஒரு அதிரடி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சத்யா.என்.சூரியன் மற்றும் எடிட்டர் ரூபன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

    சுல்தான் திரைப்படத்தின் மூலம் நடிகர் கார்த்தி சிவகுமாருக்கு ஜோடியாக தென்னிந்தியா பிரபல தெலுங்கு மற்றும் கன்னட திரைப்பட நடிகை ராஷ்மிகா மந்தண்ணா தமிழில் அறிமுகமாகியுள்ளார். இப்படமானது "ரெமோ" திரைப்படத்தினை தொடர்ந்து இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இரண்டாவது திரைப்படமாகும்.

    சுல்தான் திரைப்படத்தின் கதை

    கதைக்கரு: நூறு ரௌடிகளை தனது கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு ஒரு கௌரவ சேனையை வழிநடத்தும் நெபோலியேன், சிலரின் சூழ்ச்சியில் சிக்கி தாக்கப்படுகிறார். பின் நெபோலியேன் மகனான கார்த்தி, எதிரிகளை எதிர்த்து போராடுவதே இப்படத்தின் கதை.

    கதை 

    ஒரு இக்கட்டான சமயத்தில் அடிதடி வாழ்க்கைக்குள் வரும் நெப்போலியன், அடிதடி தொழில் செய்ய முடிவெடுத்து ஒரு நூறு ரௌடிகளை தனது அடியாட்களாக சேர்த்து கொண்டு ஒரு கௌரவ சேனையை வழிநடத்துவது போல் அனைவரின் உதவியோடு ரௌடிசம் செய்கிறார்.

    நெப்போலியனின் மனைவி பிரசவத்தின் போது ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து உயிர் விடுகிறார். பிறக்கும் போது தாயை இழந்த சுல்தான் (கார்த்தி), நெப்போலியனின் நூறு ரௌடிகளால் அன்பாக வளர்க்கப்படுகிறான்.

    தனது தாய் இடத்தில் இருந்து தன்னை வளர்த்த அந்த ரௌடிகளை தனது அண்ணனாக பார்க்கும் கார்த்தி, ரௌடிசத்தில் ஈடுபாடு இல்லாமல், படித்து ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். விடுமுறையில் தனது ஊருக்கு வரும் கார்த்தி, அங்கு ருக்மணி (ரஷ்மிக மந்தன்னா)-வை கண்டு காதல் மோகத்தில் மிதக்கிறார்.

    ரஷ்மிக்காவின் தந்தை பொன்வண்ணன், நெப்போலியனிடம் தனது கிராமத்தை மக்களை வில்லன் ஜெயசீலனிடம் இருந்து காப்பாற்றி தரவேண்டும் என வேண்டுகிறார். இதற்கு நெப்போலியனின் சம்மதிக்க, காவல் அதிகாரிகள் சூழ்ச்சி செய்து நெப்போலியனின் சாம்ராஜ்ஜியத்தை வீழ்த்த திட்டமிடுகின்றனர். இதில் திட்டத்தில் நெப்போலியன் உயிரிழக்கிறார்.

    நெப்போலியன் இறக்க, கார்த்தி தனது நூறு அண்ணன்களையும் வழிநடத்துகிறார். தனது அண்ணன்களை நல்வழிப்படுத்துவேன் என காவல் அதிகாரியிடம் சென்று 6 மாதம் அவகாசம் கேட்கிறார் கார்த்தி. ஆனால் கார்த்தியின் அண்ணன்கள் நெப்போலியன் வாக்களித்த படி அந்த கிராமத்தை காப்பாற்ற வேண்டும் என விருப்புகின்றனர்.

    கார்த்தி தனது அண்ணன்களை அழைத்து கொண்டு அந்த கிராமத்திற்கு சென்று பொன்வண்ணனின் கிராம மக்களுக்கு பாதுகாப்பாகவும், தனது அண்ணன்களை திருத்த முயற்சி செய்து வருகிறார். பின் இந்த கிராமத்து மக்களின் பிரச்சனையை அறியும் கார்த்தி, அவர்களுக்கு உதவி செய்கிறார்.

    இறுதியில் தனது அண்ணன்களை எப்படி நல்வழிப்படுத்தினார்?, அந்த கிராமத்து மக்களின் பிரச்சனையை தீர்த்து வைத்தாரா?, கார்த்தி. என்பதே படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie சுல்தான் with us? Please send it to us ([email protected]).