twitter

    சயீரா நரசிம்ம ரெட்டி கதை

    சயீரா நரசிம்ம ரெட்டி இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதிபதி, மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நயன்தாரா, தம்மனா,ஜெகபதி பாபு மற்றும் சுதீப் நடித்துள்ள அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராம் சரண் தயாரிக்க, இசையமைப்பாளர் அமித் திரிவேதி இசையமைத்துள்ளார்.

    வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை ஒளிப்பதிவாளர் ஆர் ரத்னவேலு ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் எ ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணி செய்துள்ளார். சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தினை தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கோணிடில ப்ரோடுக்ஷன் நிறுவனம் தயாரிக்க, இப்படத்தினை தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் விநியோகம் செய்துள்ளது.

    சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தினை பற்றிய தகவல்கள்

    1857-ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த போராட்டத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தினை தயாரித்துள்ளனர் படக்குழுவினர். இத்திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் சிரஞ்சீவி தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டார் என போற்றப்படுபவர்.

    இத்திரைப்படம் ஆந்திர மாநிலத்தில் 1857ல் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் போராட்டத்தினை தொடங்கிய சயீரா நரசிம்ம ரெட்டி என்னும் அரசனின் கதை. வில், வேல். ஈட்டி ஆகியவற்றை ஆயுதமாக கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக எவ்வாறு போராடினர் என்பதே படத்தின் கரு.

    சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு அரசனின் கதை என்றாலும் அவருக்கு உதவியாக கர்நாடக மற்றும் தமிழ் மன்னர்கள் சில இவருக்கு ஆதரவாக நின்று போட்டியிட்டுள்ளனர். இங்கு கர்நாடக மன்னனாக சுதீப் நடிக்க, தமிழ் மன்னனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

    கதை

    உய்யலவாடா பகுதியின் நிர்வாக மற்றும் இராணுவ ஆட்சியாளராக இருக்கும் நரசிம்ம ரெட்டி தனது குரு கோசாய் வெங்கண்ணாவின் ஆலோசனையின் படி, எப்படி ஒரு போர் வீரராகவும் தலைவராகவும் மாறி எப்படி குடிமக்களுக்கு நல்லது செய்கிறார் என்பது பற்றின உண்மை கதை தான் சயீரா நரசிம்ம ரெட்டி. இதில் நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவியும் குரு கோசாய் வெங்கண்ணாவாக அமிதாப் பச்சனும் அற்புதமாக நடித்துள்ளார். நரசிம்ம ரெட்டியாக சிரஞ்சீவி நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வீரபாண்டிய கட்ட பொம்மன் என்றால் எப்படி நமக்கு சிவாஜி நினைவிற்கு வருவாரோ அதே போல இனி நரசிம்ம ரெட்டி என்றாலே சிரஞ்சீவிதான் கண் முன் வருவார் என்று சொன்னால் மிகையாகாது.

    சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரிப்பில் 200 கோடி பட்ஜெட்டில் மிக மிக பிரமாண்டமாய் உருவாக்கப்பட்ட வரலாற்று காவியம்தான் சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம். நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வரலாற்று படம் இது.
    **Note:Hey! Would you like to share the story of the movie சயீரா நரசிம்ம ரெட்டி with us? Please send it to us ([email protected]).