X
டக்கர்
Action | 09 Jun 2023 | U/A | 139 Mins
Tamil

டக்கர் கதை

டக்கர் - இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு, திவ்யன்ஷா கௌஷிக் என பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தயாரிக்க, இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

அதிரடி திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கவுதம் எடிட்டிங் செய்துள்ளார்.

டக்கர் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 ஜூன் 09ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.



டக்கர் திரைப்படத்தின் கதை

எப்படியாவது பெரிய பணக்காரன் ஆகி விட்டால் வாழ்க்கையில் கஷ்டமே இருக்காது என குருட்டுத்தனமாக நம்பும் நாயகன் குணசேகரன் கதாபாத்திரத்தில் சித்தார்த், அவருக்கு அப்படியே முரண்பாடான கதாபாத்திரமான பெரிய பணக்காரியாக இருப்பதாலேயே பல துன்பங்களுக்கு ஆளாகும் லக்கியாக நாயகி திவ்யான்ஷா கவுசிக். பணத்தை வைத்து பட்டிமன்றம் மற்றும் நீயா நானா நடத்தியதை போல ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர். குணசேகரன் பணக்காரனாகி சந்தோஷம் அடைந்தாரா? லக்கி பணத்தால் ஏற்பட்ட பிரச்சனைகளை சமாளித்தாரா என்பது தான் படத்தின் கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+