தி லெஜெண்ட் கதை

  தி லெஜெண்ட் இயக்குனர் ஜே.டி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ள அறிவியல் புனைவு மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தின் மூலம் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு. லெஜெண்ட் சரவணன் (சரவணன் அருள்) தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

  தி லெஜெண்ட் படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். ஆர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபென் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவுப்பு 2022 மார்ச் ௦4ல் இணையதள ட்விட்டர் பக்கத்தில் படக்குழு சார்பில் வெளியானது.

  இப்படத்தில் நாயகனாக நடிக்கும் லெஜெண்ட் சரவணன் உடன் ஊர்வசி ராவ்டேலா, கீத்திகா, பிரபு, விஜயகுமார், யோகி பாபு, விவேக், கோவை சரளா, நாசர் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.   
  தி லெஜெண்ட் படத்தின் கதை
   
  இந்தியா விஞ்ஞானியான டாக்டர் சரவணன் (லெஜெண்ட் சரவணன்) ஆண்டிபையோட்டிக்ஸ் என்ற அறிவியல் தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி செய்து ஒரு மருந்தை கண்டறிந்து சாதனை படைக்கிறார். இதனால் இவர் உலக புகழ் பெற்ற விஞ்ஞானியாக பிரபலமாகிறார்.

  அறிவியல் துறையில் இந்தியா நாட்டிற்கு பெருமை பெற்று தந்துள்ள இவர், அடுத்தாக தனது கிராமத்திற்கு சென்று அங்குவாழும் கிராமத்தினருக்கு உதவும் வகையில் சில தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும் என ஆசை படுகிறார்.

  கிராமத்தில் இவரது நண்பர் ரோபோ ஷங்கர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு இறக்கிறார். இந்தியாவில் அதிகமாக நீரிழிவு நோய் இருப்பதை பற்றி அறியும், சரவணன் அதற்காக மருந்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

  ஏற்கனவே இவர் கண்டுபிடித்துள்ள மருந்தின் காரணமாக சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இவர் நீரிழிவு நோய்க்கு எதிராக ஆராய்ச்சி செய்து வருவதை பற்றி அறிந்த சில நிறுவனங்கள் இவரது ஆராய்ச்சியை அழிக்க முயற்சி செய்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie தி லெஜெண்ட் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).