X
தமிழ் » திரைப்படங்கள் » தி லெஜெண்ட்
தி லெஜெண்ட்

தி லெஜெண்ட்

Action | Drama | Family | 28 Jul 2022 | U/A | 161 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

தி லெஜெண்ட் கதை

தி லெஜெண்ட் இயக்குனர் ஜே.டி மற்றும் ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ள அறிவியல் புனைவு மற்றும் அதிரடி திரைப்படம். இப்படத்தின் மூலம் நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் திரு. லெஜெண்ட் சரவணன் ( சரவணன் அருள் ) தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தி லெஜெண்ட் படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். ஆர் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபென் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவுப்பு 2022 மார்ச் ௦4ல் இணையதள ட்விட்டர் பக்கத்தில் படக்குழு சார்பில் வெளியானது. இப்படத்தில் நாயகனாக நடிக்கும் லெஜெண்ட் சரவணன் உடன் ஊர்வசி ராவ்டேலா, கீத்திகா, பிரபு, விஜயகுமார், யோகி பாபு, விவேக், கோவை சரளா, நாசர் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். தி லெஜெண்ட் படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தி லெஜெண்ட் படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என அணைத்து வீடியோக்கள் தி லெஜெண்ட் படத்தின் புகைப்படங்கள்   தி லெஜெண்ட் படத்தின் கதை   இந்தியா விஞ்ஞானியான டாக்டர் சரவணன் (லெஜெண்ட் சரவணன்) ஆண்டிபையோட்டிக்ஸ் என்ற அறிவியல் தொழிநுட்பத்தில் ஆராய்ச்சி செய்து ஒரு மருந்தை கண்டறிந்து சாதனை படைக்கிறார். இதனால் இவர் உலக புகழ் பெற்ற விஞ்ஞானியாக பிரபலமாகிறார். அறிவியல் துறையில் இந்தியா நாட்டிற்கு பெருமை பெற்று தந்துள்ள இவர், அடுத்தாக தனது கிராமத்திற்கு சென்று அங்குவாழும் கிராமத்தினருக்கு உதவும் வகையில் சில தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும் என ஆசை படுகிறார். கிராமத்தில் இவரது நண்பர் ரோபோ ஷங்கர் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு இறக்கிறார். இந்தியாவில் அதிகமாக நீரிழிவு நோய் இருப்பதை பற்றி அறியும், சரவணன் அதற்காக மருந்தை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஏற்கனவே இவர் கண்டுபிடித்துள்ள மருந்தின் காரணமாக சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இவர் நீரிழிவு நோய்க்கு எதிராக ஆராய்ச்சி செய்து வருவதை பற்றி அறிந்த சில நிறுவனங்கள் இவரது ஆராய்ச்சியை அழிக்க முயற்சி செய்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
Read More

தி லெஜெண்ட் நடிகர்கள் & படக்குழுவினர்

தி லெஜெண்ட் அணியின் தகவல்

இயக்குனர் ஜே டி, ஜெர்ரி
சங்கதி பட்டுக்கோட்டை பிரபாகர்
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்
தொகுப்பாளர் அன்டனி ரூபன்
இசை ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பாளர் லெஜெண்ட் சரவணன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தி லெஜெண்ட் விமர்சகர்களின் விமர்சனம்

தினமலர் - சினிமா
தி லெஜெண்ட் - பொறுமையோ பொறுமை
ஆனந்த விகடன்
ஒரு முழு படத்தையுமே மீம்மாக, நக்கல் அடிக்கும் கன்டென்டாக எடுத்து வைத்தால் என்னதான் செய்வது?!
புதிய தலைமுறை - விமர்சனம்
கதையில் மெனக்கெடலும், நாயகனுக்கு நடிப்புத் திறமையும் மிகமிகமிக அதிக அளவில் இருந்திருந்தால் கமர்ஷியல் படமாக வென்றிருக்கும்.
இந்து தமிழ்
'தி லெஜண்ட்' ஆக்கியிருக்கும் விதத்தில் டைட்டிலுக்கு நியாயம் சேர்க்கிறது படம்.
தமிழ் சமயம்
சண்டை காட்சிகளுக்கு பதில் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தி லெஜெண்ட் ட்ரெய்லர்

Video Thumbnail

தி லெஜெண்ட் பாடல்கள்

தி லெஜெண்ட் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தி லெஜெண்ட்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+