திமிரு புடிச்சவன் இயக்குனர் கணேஷா இயக்கத்தில், விஜய் ஆண்டனி, நிவேதா பெதுராஜ் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
கதை ;
சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளான முருகவேல் (விஜய் ஆண்டனி) தனது தம்பியை பெரிய போலீஸ் அதிகாரியாக்க வேண்டுமென நினைக்கிறார். ஆனால் இதை விரும்பாத தம்பி, ஊரைவிட்டே ஓடிப் போகிறார். ஆண்டுகள் உருண்டோட எஸ்.ஐ.யாக புரொமோஷன் ஆகி சென்னைக்கு மாற்றலாகிறார். ஓடிப்போன தனது தம்பியை கொலைக்குற்றவாளியாக பார்க்க நேர்கிறது. இதையடுத்து, திமிரு புடிச்சவனாக களமிறங்கும் முருகவேல், இளம் சிறார்களை குற்றவாளியாக்கும் வில்லனை துவம்சம் செய்வதே படம்.