Tamil » Movies » Thiruttu Payale 2 » Story

திருட்டுப்பயலே 2

ரசிகர்கள் கருத்து

வெளியீட்டு தேதி

30 Nov 2017
கதை
திருட்டுப்பயலே 2 இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் 10 வருடங்களுக்கு பிறகு உருவாகும் இரண்டாம் பாகம். இத்திரைப்படத்திலும் பிரசன்னா, சிம்ஹா, விவேக், அமலா பால் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம்.

கணவனுக்குத் தெரியாமல் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி சொகுசு வாழ்க்கை வாழும் ஒருவனின் கதையை திருட்டுப் பயலேவில் சொன்ன சுசி கணேசன், அதன் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார், அதே தலைப்பில். ஆனால் அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் துளியும் தொடர்பில்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்மறை பாதிப்புகள்தான் இந்தக் கதைக்கு அடித்தளம். நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா. பிரபலங்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்பது அவருக்கு இடப்பட்ட உத்தரவு. நேர்மை வேலைக்காகாது எனப் புரிந்து மெல்ல மெல்ல காசு பார்க்க ஆரம்பிக்கிறார். ஒரு நாள் அமைச்சரான எம்.எஸ்.பாஸ்கரின் போன்காலை ஒட்டுக் கேட்கும் பாபி, பாஸ்கரின் பணத்தை அபேஸ் செய்கிறார். இந்த வேலையைத் தொடர ஆரம்பிக்கிறார். பாபியின் காதல் மனைவி அமலா பால் ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர். அமலா பால் பிறந்தநாளுக்கு தனது நண்பர்களை விருந்துக்கு அழைக்கிறார். அந்த நண்பர்களின் போன் கால்கள் மற்றும் அமலாபாலின் போன் நம்பரையும் ஒட்டுக் கேட்கிறார் பாபிசிம்ஹா. இதில் திருமணமான பெண்களிடம் மோசமாக பேசி வலைவிரிக்கும் பிரசன்னாவை நோட்டம் விடுகிறார். ஒரு நாள் பிரசன்னா, அமலா பாலிடம் பேசுவதையும் கேட்டு அதிர்ச்சியடையும் பாபி சிம்ஹா அவரை போலீஸ் வைத்து அடிக்கிறார். பாபி சிம்ஹா செய்யும் தில்லாங்கடி வேலைகள் பற்றிய தகவல்களை சேகரித்து அவரை பழிவாங்க முயற்சிக்கிறார் பிரசன்னா. இன்னொரு பக்கம் அமலா பாலை அடையவும் முயற்சிக்கிறார். பிரசன்னா அதில் ஜெயித்தாரா? பாபி சிம்ஹாவின் திருட்டுத்தனங்கள் அம்பலமானதா? பிரசன்னாவுக்கு பலியானாரா அமலா பால்? என்பது மீதி.
Buy Movie Tickets
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil