TamilbredcrumbMoviesbredcrumbThiruttu Payale 2
    திருட்டுப்பயலே 2

    திருட்டுப்பயலே 2

    Release Date : 30 Nov 2017
    Critics Rating
    4.75/5
    Audience Review
    திருட்டுப்பயலே 2 இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் 10 வருடங்களுக்கு பிறகு உருவாகும் இரண்டாம் பாகம். இத்திரைப்படத்திலும் பிரசன்னா, சிம்ஹா, விவேக், அமலா பால் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம்.

    கணவனுக்குத் தெரியாமல் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி சொகுசு வாழ்க்கை வாழும் ஒருவனின் கதையை திருட்டுப் பயலேவில் சொன்ன சுசி கணேசன், அதன் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார், அதே தலைப்பில். ஆனால் அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் துளியும் தொடர்பில்லை. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்மறை பாதிப்புகள்தான் இந்தக் கதைக்கு அடித்தளம். நேர்மையான...
    • சுசி கணேசன்
      Director
    • கல்பாத்தி எஸ் அகோரம்
      Producer
    • கல்பாத்தி எஸ் கணேஷ்
      Producer
    • கல்பாத்தி எஸ் சுரேஷ்
      Producer
    • tamil.filmibeat.com
      3/5
      திரைக்கதையில் திருட்டுப் பயலே அளவுக்கு 'கிக்' இல்லை என்றாலும், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இடைவேளைக்குப் பிறகு பாபிக்கும் பிரசன்னாவுக்கும் இடையிலான பூனை - எலி கண்ணாமூச்சு சலிப்படைய வைக்கிறது. காட்சிகளையும் எளிதில் யூகிக்க முடிகிறது. நேர்மையான போலீசாக இருந்து மெல்ல மெல்ல வழுவி, பணத்தாசை பிடித்த நல்ல திருட்டுப் பயலாக மாறும் வேடத்தை சரியாகவே செய்திருக்கிறார் பாபி சிம்ஹா. அவருக்கு சற்றும் சளைக்காத சைபர் கிரிமினலாக பிரசன்னா. நடுத்தர குடும்பத்துப் பெண்கள் பேஸ்புக் அடிமைகளாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை அமலா பால் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அளவான கவர்ச்சி, இயல்பான நடிப்பு என சரியான கலவை. எம்எஸ் பாஸ்கர், விவேக், ரோபோ சங்கர் என யாரும் மிகையாக நடிக்காதது ஆறுதல். சுசி கணேசன் எதற்கு வருகிறார் என்று அவருக்கே தெரியவில்லை போலிருக்கிறது. செல்லத்து..