டூரிஸ்ட் ஃபேமிலி
டூரிஸ்ட் ஃபேமிலி, அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ள இப்படம் நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் அழகான திரைப்படம். சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ள இந்த குடும்ப காமெடி திரைப்படத்தில் M S பாஸ்கர் , யோகி பாபு , கமலேஷ் ஜெகன், மிதுன் ஜெய் ஷங்கர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டனின் இசையமைத்துள்ளார், படத்தின் கருப்பொருளை நிறைவு செய்கிறது. நசரத் பாசிலியன், மகேஷ் ராஜ் பாசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது, இது ஒரு வசீகரமான சினிமா பயணத்தை வழங்குகிறது.
கதை
புதிய வாழ்க்கையை தேடி இந்தியாவிற்கு குடிபெயர்ந்த ஒரு அன்பான இலங்கை குடும்பம், ஒரு தெருவிற்கு குடி போகின்றார்கள். அன்பென்றால் என்ன என்று தெரியாத அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த தெருவில் உள்ள மக்கள் இவர்களது அன்பு மற்றும் அரவணைப்பால் ஒரு புதிய ஒற்றுமையான சூழலில் வாழ வழி வகுக்கின்றது.
வெளியீடு
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மே 1, 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.