twitter

    டிராபிக் ராமசாமி கதை

    டிராபிக் ராமசாமி தமிழ் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை விஜய் விக்ரம் இயக்க, எஸ் ஏ சந்திரா சேகர், ரோகினி, ஆர் கே சுரேஷ், அம்பிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

    கதை :

     டிராப்பிக் ராமசாசியின் வாழ்வைப்பற்றிய 'ஒன் மேன் ஆர்மி' எனும் புத்தகத்தை நடிகை குஷ்புவும், இயக்குனர் சீமானும் வெளியிடுகின்றனர். விஜய் சேதுபதி அந்த புத்தகத்தை வாசிக்க தொடங்குவதில் இதில் ஆரம்பிக்கிறது டிராப்பிக் ராமசாமியின் போராட்ட அத்தியாயம். சிறு சிறு சம்பவங்களை தொகுத்து, அவரது வாழ்க்கையை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
    மனைவி, மகள், மகன் பேத்தி என குடும்பத்துடன் மகழ்ச்சியாக இருந்தாலும், சமுதயாத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில் முதல் ஆளாக நிற்கிறார் டிராபிக் ராமசாமி. தன்னுடைய 75வது பிறந்தநாள் விழாவில் கூட கேக் வெட்டாமல், டாஸ்மாக்குக்கு எதிராக குரல் கொடுக்க சென்றுவிடுறார் மனிதர்.

    14வது வயதில், தன்னிடம் இருந்த அரிசிப் பையை பறித்துப்போகும் தாசில்தார் மீது புகார் கடிதம் எழுதிப்போட்டதில் இருந்து துவங்குகிறுது டிராப்பிக் ராமசாமியின் போராட்டக் குணம். ரோட்டில் எச்சில் துப்புபவரிடம் தகராறு செய்வது, அதை நியாயப்படுத்து பெண் காவல் அதிகாரியையும் அறைவது, கோர்ட்டில் நீதிபதி முன்பு தன்னை தானே செருப்பால் அடித்துகொள்வது என ஒவ்வொரு போராட்டமும் ஒருவிதம்.

    தண்ணீர் பிரச்சினைக்காக மேயரை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜெயிக்கிறார் டிராப்பிக் ராமசாமி. இதனால் ஆத்திரமடையும் மேயர் ஆட்களை வைத்து, வயதான மனிதரை அடிக்கிறார். ஓரிடத்தில் விஜய் ஆண்டனி வந்து தட்டிக்கேட்டிகிறார்.

    பெண் காவல் அதிகாரியின் அதிகார அத்துமீறலை வெளிச்சம் போட்டு காட்டும் போது, ஸ்டேஷனிலேயே வைத்து வெளுவெளுவென வெளுத்து வாங்குகிறார் அந்த பெண் அதிகாரி. இதை பார்த்து இறக்கப்படும் ரவுடி டேனி (ஆர்.கே.சுரேஷ்), டிராப்பிக் ராமசாமிக்கு பக்கபலமாக மாறுகிறார்.

    டிராப்பிக் ராமசாமி மீதான பொய் வழக்கில் இருந்து அவரை விடுவிக்கிறார் நீதிபதி எஸ்.வி.சேகர். நேர்மையான போலீஸ் கமிஷ்னரான பிரகாஷ் ராஜ், அந்த பெண் அதிகாரியை டிஸ்மிஸ் செய்கிறார்.

    இப்படியாக படம் நகர்ந்துகொண்டிருக்கையில், மீன்பாடி வண்டிக்கு எதிராக டிராப்பிக் ராமசாமி தொடரும் வழக்கு, பலருக்கு ஆபத்தாக மாறுகிறது. இதனால் டிராப்பிக் ராமசாமியை தீர்த்துக்கட்ட வில்லன் கும்பல் துடிக்கிறது. அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதை கமெர்சியலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
    **Note:Hey! Would you like to share the story of the movie டிராபிக் ராமசாமி with us? Please send it to us ([email protected]).