உடன்பிறப்பே இயக்குனர் இ. ரா சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, கலையரசன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் குடும்பத் திரைப்படம். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும்.
தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடுப்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டிங் செய்துள்ளார். இத்திரைப்படம் நேரடியாக ஆன்லைன் ஓடிடி தளத்தில் ஆயுத பூஜை சிறப்பு திரைப்படமாக 2021 அக்டோபர் 14ல் அமேசான் பிரைம் வீடியோ செயலியில் வெளியாகியது.
உடன்பிறப்பே திரைப்படத்தின் கதை
கதைக்கரு: அண்ணண் தங்கை பாசத்தை மையப்படுத்தி சமூக அக்கறை மற்றும் நகைச்சுவை கலந்த குடும்ப பாங்கான படம் தான் உடன்பிறப்பே . வன்முறையை கையிலெடுக்கும் அண்ணண் ஒருபுறம், நியாயம் நேர்மை,சட்டம் என வாழும் கணவர் ஒருபுறம். இருவருக்கும் மத்தியில் தவிக்கும் ஒரு தங்கையின் பாச போராட்டமே "உடன்பிறப்பே".