உன்னைப் போல் ஒருவன் 2009 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். சக்ரி டோலட்டியால் இயக்கப்பட்டு கமலஹாசன் மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ஒரு வெற்றிப் படம். இது நீராஜ் பாண்டே இயக்கத்தில் 2008 இல் வெளியான எ வென்னஸ்டே என்ற இந்தித் திரைப்படத்தின் தழுவல் ஆகும்.
கதை:
சென்னை காவல்துறை ஆணையரான ராகவ மராருக்கு (மோகன்லால்) மர்ம நபர் ஒருவர் போன் செய்கிறார் (கமல ஹாசன்). அந்த பெயர் கூறாத மர்ம நபர் சென்னை நகரத்தில் 5 இடத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடி குண்டு வைத்துள்ளதாக கூறுகிறார். அவர் கோரிக்கையான 4 தீவிரவாதிகளை குறிப்பிட்ட இடத்தில் விடுவிக்க வேண்டுமெனவும் இல்லையெனில் குண்டுகள் வெடிக்கும் எனவும் கூறுகிறார். இறுதியில் 4 தீவிரவாதிகளும் காவல் துறை அதிகாரிகளான ஆரிஃப் கான் (கணேஷ் வெங்கட்ராமன்) மற்றும் சேதுராமன் (பாரத் ரெட்டி) ஆகியோரின் பாதுகாப்புடன் மர்ம நபர் குறிப்பிட்ட இடமான விமான நிலையத்தில் விடுவிக்கப்படுகின்றனர். அதன் பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களும் அதற்கான காரணங்களும்தான் கதையின் முடிவு.