உறியடி 2 கதை

  உறியடி 2 - உறியடி முதல் பாகம் படத்தினை இயக்கி நடித்த விஜயகுமார் இரண்டாம் பாகத்தையும் தானே இயக்கி நடித்துள்ளார். இவருடன் சுதாகர் மற்றும் புதுமுக நடிகை விஸ்மயா நடித்துள்ளனர். இப்படத்தினை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார்.

  கதை
  லெனின் விஜய் உறியடி திரைப்படத்தில் ஒரு கல்லூரி மாணவன் சமூகத்தில் தன்னை சுற்றி நிகழும் சாதி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் எவ்வாறு பாதிக்க படுகிறான் என்று அதிரடி திரில்லர் உடன் கூறிருந்தார். தற்போது இப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள உறியடி 2 திரைப்படத்தில் வேலைக்கு செல்லும் இளைஞர் தோற்றத்தில் தோன்றியுள்ளார் இப்படத்தின் நாயகன் லெனின் விஜய்.

  பல நாடுகளால் தடைசெய்யப்பட்ட ஒரு பூச்சிக்கொல்லி மருந்து ஆலையம் ஒன்றினை தமிழகத்தில் நிறுவ தமிழக மலை பகுதிகளில் உள்ள ஒரு கிராமத்தை தேர்ந்தேடுக்கிறார்கள். இச்செயலுக்கு தமிழக அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பணம் வாங்கிக் கொண்டு அந்நிறுவனத்திற்கு உறுதுணையாக இருக்கின்றனர்.

  பின்னர் பூச்சிக்கொல்லி மருந்து என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த கெமிக்கல் ஆலையினால் ஏற்படும் கொடிய தீங்கு விளைவுகள் அந்த கிராம மக்களை எவ்வாறு பாதிக்கின்றது என்றும், இதனை இப்படத்தின் நாயகன் லெனின் விஜய் போராட்டம் மூலம் எதிர்கொள்கிறார். இறுதியில் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ?, அதற்கு உரிய தீர்வு கிடைத்ததா ?, இப்பிரச்னைகளுக்கு காரணங்கள் என்ன?, என்பதே படத்தின் மீதிக்கதை.

  **Note:Hey! Would you like to share the story of the movie உறியடி 2 with us? Please send it to us (popcorn@oneindia.co.in).