X
உறியடி 2

உறியடி 2

Action | 05 Apr 2019 | U | 119 Mins
Tamil

2.5 /5 Users

4 /5 Filmibeat

உறியடி 2 கதை

உறியடி 2 - உறியடி முதல் பாகம் படத்தினை இயக்கி நடித்த விஜயகுமார் இரண்டாம் பாகத்தையும் தானே இயக்கி நடித்துள்ளார். இவருடன் சுதாகர் மற்றும் புதுமுக நடிகை விஸ்மயா நடித்துள்ளனர். இப்படத்தினை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். கதை லெனின் விஜய் உறியடி திரைப்படத்தில் ஒரு கல்லூரி மாணவன் சமூகத்தில் தன்னை சுற்றி நிகழும் சாதி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் எவ்வாறு பாதிக்க படுகிறான் என்று அதிரடி திரில்லர் உடன் கூறிருந்தார். தற்போது இப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள உறியடி 2 திரைப்படத்தில் வேலைக்கு செல்லும் இளைஞர் தோற்றத்தில் தோன்றியுள்ளார் இப்படத்தின் நாயகன் லெனின் விஜய். பல நாடுகளால் தடைசெய்யப்பட்ட ஒரு பூச்சிக்கொல்லி மருந்து ஆலையம் ஒன்றினை தமிழகத்தில் நிறுவ தமிழக மலை பகுதிகளில் உள்ள ஒரு கிராமத்தை தேர்ந்தேடுக்கிறார்கள். இச்செயலுக்கு தமிழக அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பணம் வாங்கிக் கொண்டு அந்நிறுவனத்திற்கு உறுதுணையாக இருக்கின்றனர். பின்னர் பூச்சிக்கொல்லி மருந்து என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த கெமிக்கல் ஆலையினால் ஏற்படும் கொடிய தீங்கு விளைவுகள் அந்த கிராம மக்களை எவ்வாறு பாதிக்கின்றது என்றும், இதனை இப்படத்தின் நாயகன் லெனின் விஜய் போராட்டம் மூலம் எதிர்கொள்கிறார். இறுதியில் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன ?, அதற்கு உரிய தீர்வு கிடைத்ததா ?, இப்பிரச்னைகளுக்கு காரணங்கள் என்ன?, என்பதே படத்தின் மீதிக்கதை.
Read More

உறியடி 2 நடிகர்கள் & படக்குழுவினர்

உறியடி 2 அணியின் தகவல்

இயக்குனர் விஜய் குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை கோவிந்த் வசந்த்
தயாரிப்பாளர் சூர்யா சிவகுமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

உறியடி 2 விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
பேராசை பிடித்த தொழிலதிபர் ராஜ்பிரகாஷ், செங்கதிர்மலையின் இயற்கை வளத்தை அழித்து தாமிர தொழிற்சாலை ஒன்றையும் திறக்க நினைக்கிறார். ஆனால் அதற்கு கால அவகாசம் அதிகம் தேவைப்படும் என்பதால், அதிக லாபம் பார்ப்பதற்காக தனது ரசாயன தொழிற்சாலையின் உற்பத்தியை இரு மடங்காக்குகிறார். இதற்காக உள்ளூர் எம்பி தமிழ்குமரன் மற்றும் சாதிக்கட்சி தலைவர் செங்கை குமார் ஆகியோருக்கு லஞ்சம் கொடுத்து கைக்குள் போட்டுக்கொள்கிறார். ஆரம்பத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்க வேண்டிய ஒரு பெயர் கோவிந்த் வஸந்தா. படத்தின் மற்றொரு ஹீரோ இவர் தான். படத்தின் ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை இவரது இசை ராஜ்யம் தான். இன்டர்வெல் பிளாக் வரையிலான முதல் பாதியில், ஹார்ட்பீட்டை ஏற்றுகிறார். இரண்டாம் பாதியில் வரும் 'இறைவா நீ இருக்கிறாயா?' பாடலில் உருகவைத்துவிடுகிறார். 'வா வா பெண்ணே' பாட்டு காதுகளில் ரீக்காரமிடுகிறுது. க்ளைமாக்ஸ் காட்சியின் போது ஒலிக்கும் 'அக்னி குஞ்சொன்று கண்டேன்' நரம்புகளை முறுக்கேற செய்கிறது. தமிழ் சினிமாவில் இது இளைஞர்களின் காலம். உறியடி 2 இன்றைய இளைஞர்களுக்கான தரமான அரசியல் படம். பேராசை பிடித்த சுயநல அரசியல்வாதிகளுக்கு சரியான சம்மட்டி அடி, இந்த உறியடி 2.

உறியடி 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

உறியடி 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+