Just In
- 17 min ago
கொல மாஸ் டான்ஸ்.. வெளியானது வாத்தி கம்மிங் பாடல் வீடியோ.. டிரெண்டாகும் #VaathiComing
- 25 min ago
லயோலாவில் களைக்கட்டிய ஒயிலாட்டம்.. சாட்டைக்குச்சி ஆட்டம்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 45 min ago
பாலா ஏன் பின்னாடி நிக்கிறாரு? டிடியுடன் ஆரி முதல் ஷிவானி வரை.. களைகட்டிய பிக் பாஸ் கொண்டாட்டம்!
- 1 hr ago
ரொம்ப நன்றி ரேகா மேடம்.. நீங்களாவது போட்டீங்களே.. ஷிவானியின் போட்டோவை பார்த்து உருகும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
பழனியில் காவடி சுமந்த பாஜகவின் எல். முருகன் - வேண்டுதலை நிறைவேற்றி சிறப்பு வழிபாடு
- Automobiles
ஹூண்டாய் கார் வாங்க இருந்தவர்களுக்கு ஒரு ஷாக் நியுஸ்!! கார்களின் விலைகள் உயர்த்தப்பட்டன
- Sports
இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்.. முக்கிய வீரர்களை சென்னைக்கு அனுப்பாத இங்கிலாந்து.. மாஸ்டர் பிளான்!
- Finance
4 நாளில் கிட்டதட்ட 2,400 புள்ளிகள் வீழ்ச்சி.. கொடுத்ததை மொத்தமாக வாங்கிக் கொண்ட சென்செக்ஸ்?
- Lifestyle
தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Exclusive உறியடி 2.. நிச்சயம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.. இயக்குனர் விஜய் குமார் நம்பிக்கை!

சென்னை: நடைபெறவுள்ள தேர்தலில் உறியடி 2 திரைப்படம் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என அப்படத்தின் இயக்குனரும், நாயகனுமான விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றப்படம் உறியடி. இந்த படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்த விஜய் குமார் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவர் தற்போது இயக்கியுள்ள படம் உறியடி 2. இதனை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.
இப்படம் ஏப்ரல் 5ம் தேதி திரைக்கு வருகிறது. ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்த விஜய் குமாரை ஒன்இந்தியாவுக்காக சந்தித்தேன். அவருடன் உரையாடியதில் இருந்து...
வைரலாகும் கங்கனாவின் உள்ளாடை இல்லாத சர்ச்சை போஸ்டர்

உறியடி 2: கதை களம்
"உறியடி 2 முதல் பாகத்தின் தொடர்ச்சி கிடையாது. ஆனால் இரண்டு படங்களின் மையக்கருத்தும் பொதுவானதாக இருக்கும். இந்த படத்தை தான் எனது முதல் படமாக இயக்க நினைத்தேன். ஆனால் அப்போது பட்ஜெட் செட்டாகாததால், வேறு ஒரு கதையை எடுத்தேன். இப்போது நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளதால் இந்த படத்தை எடுத்துள்ளேன்.

மூன்று முக்கிய பிரச்சினைகள்
இந்த படம் மூன்று முக்கியமான பிரச்சினைகளை பற்றி பேசுகிறது. ஊழல் அரசியல்வாதிகள், சாதிய கட்சிகள் மற்றும் உழைப்பை சுரண்டும் முதலாளித்துவம் ஆகிய மூன்றும் தான் உறியடி 2ன் மையக்கரு. இந்த மூன்று பிரச்சினைகளையும் படம் கேள்வி கேட்கும்.

பிரித்தாலும் யுக்தி
சாதி, மதம் என்ற பெயரில் நம் மக்களை பிரித்தாலும் யுக்தியை அரசியல்வாதிகள் கடைப்பிடிக்கிறார்கள். இதற்கு பலியாவது அப்பாவி இளைஞர்கள் தான். அதுவும் அவிழ்த்துவிட்ட காளை போல் திரியும் பசங்க தான் அவங்களோடு டார்கெட். ஏனென்றால் அவர்கள் தான் எந்த கேள்வியும் கேட்காமல் சொன்னதை உடனே செய்வார்கள்.

இளைஞர்கள் மீது அக்கறை
ஒரு நாட்டின் மிகப்பெரிய சக்தி இளைஞர்களின் மூளை. அதனை தவறாக வழி நடத்துபவர்கள் தான் இங்கு அதிகம். அந்த இளைஞர்கள் மீதுள்ள அக்கறையை தான் எனது இரண்டு படங்களும் வெளிப்படுத்தும்.

ஏன் காமெடியா பார்க்கணும்
நம்ம நாட்டுல எல்லா பிரச்சினையையும் காமெடியாக அணுகி, அதனுடைய தீவிரத்தை குறைத்துவிடுகிறார்கள். எனவே தான் எனது படத்தை நான் சீரியசாகவே எடுத்துள்ளேன். இந்த படம் பார்வையாளர்களை சந்தோஷப்படுத்தாது. ஆனால் நிச்சயம் சிந்திக்க வைக்கும். இது தேர்தல் நேரம் என்பதால், பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிறிய அளவிலாவது இப்படம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கோபத்தின் வெளிபாடு
அடுத்தவங்க கஷ்டப்படுவதை பார்த்து நாமும் கஷ்டப்படனும். ஏன் இப்படி நடக்குது என கோபப்படனும். 2009 மே மாதத்துக்கு பிறகு நான் சாமி கும்பிடுவது இல்லை. என்னை காப்பாற்றிய கடவுள், இலங்கையில் உள்ள தமிழ் மக்களை ஏன் காப்பாற்றவில்லை என்ற கோபம் தான் காரணம். இதுபோன்ற நிறைய கோபங்களின் வெளிபாடு தான் உறியடி 2", என்கிறார் இயக்குனர் விஜய் குமார்.