உத்தமப் புத்திரன், 2010 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மித்திரன் ஜவகர் இயக்கியுள்ளார்.
2008 ஆம் ஆண்டில் வெளியான தெலுங்குத் திரைப்படமான ரெடி என்பதன் மறு ஆக்கமே இத்திரைப்படம். இத்திரைப்படத்தின் முக்கிய வேடங்களில் தனுஷ், ஜெனிலியா ஆகியோர் நடித்துள்ளனர். ஆறு பாடல்களுக்கும் விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.