வாடிவாசல், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அதிரடி திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளார். இப்படமானது நடிகர் சூர்யாவின் திரைவாழ்வில் இவர் பணியாற்றும் 40வது திரைப்படமாகும். சூர்யா 40 என்ற தாற்காலிய பெயருடன், இப்படத்தினை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் 2019 டிசம்பர் 21ல் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் திரைத்துறையில் அறிமுகமாகி தொடர்ந்து தனுஷ் உடன் பணியாற்றி வெற்றி கூட்டணி என புகழ் பெற்ற இவர், இப்படத்தின் மூலம் சூர்யாவுடன் முதன் முதலில் பணியாற்றுகிறார்.