twitter
    Tamil»Movies»Vaazhl»Story

    வாழ் கதை

    வாழ் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனமான 'எஸ்.கே புரொடக்‌ஷன்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு நேரடியாக "சோனி லைவ்" ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்.

    இப்படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் இரண்டாவது திரைப்படமாகும் வாழ், இப்படத்திற்கு முன்பு இவர் 'அருவி' திரைப்படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்கிய அருவி திரைப்படம் விமர்சனம் ரீதியாக மிக பெரிய புகழ் பெற்ற திரைப்படமாகும்.

    இத்திரைப்படத்தில் பிரவீன் ஆன்டனி, யாத்ரா, டிஜே பாணு, திவா தவான் என புது முக நடிகர்/நடிகைகள் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் ரெமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங் பணி செய்ய, இசையமைப்பாளர் பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படம் எஸ்.கே புரொடக்‌ஷன்-ன் கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா திரைப்படத்தினை தொடர்ந்து உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம். 

    வாழ் திரைப்படத்தின் கதை

    ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவரும் நாயகன் பிரகாஷ் (பிரதீப்), தான் மெஷின் வாழ்க்கை வாழ்வதாக ஒரு விரக்தியான உணர்வை அடைகிறார். அதனால் பிரகாஷ் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தில் பிரகாஷ் சென்ற இடங்கள், அங்கு 
    சந்தித்த மக்கள், அவர்களின் மனநிலை, பிரச்சனைகள் மற்றும் எதிர்பாராத சந்திப்பு என அவர் பெற்ற அனுபவங்களே இப்படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie வாழ் with us? Please send it to us ([email protected]).