X
வட சென்னை
Action | 17 Oct 2018 | A | 166 Mins
Tamil

வட சென்னை கதை

வட சென்னை தமிழில் வெளிவரவிருக்கும் வெற்றிமாறனின் இயக்கத்தில், தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெறேமியா நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ரௌடியாகவும், ஆண்ட்ரியா ஒரு விலை மாது பெண்ணாகவும், இவர்களுடன் கருணாஸ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

கதை : 

1987ம் ஆண்டில் இருந்து படம் தொடங்குகிறது. சமுத்திரகனி, கிஷோர், பவன், தீனா ஆகிய நான்கு பேரும் மட்ட (கொலை) செய்த கையோடு ஒரு ஓட்டலில் அமர்ந்து பேசுகிறார்கள். கிஷோரின் திட்டப்படி சமுத்திரகனியும், பவனும் சிறைக்கு செல்கிறார்கள். கிஷோர் அவர்களை ஜாமீனில் எடுக்கத் தவறுவதால், நால்வர் அணி இரு கோஷ்டிகளாக பிரிகிறது. இதையடுத்து கதை 2000வது ஆண்டுக்கு முன்னகர்கிறது. கேரம்போர்டு ப்ளேயரான அன்பு (தனுஷ்) சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை போட்டுதள்ள பவனின் கோஷ்டி துடிக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, எதிர் கோஷ்டியான கிஷோரிடம் அடைக்கலம் ஆகிறார். தனுஷ் யார், அவர் ஏன் சிறைக்கு வருகிறார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது படம்.

மேலே சொன்னவை வடசென்னை படத்தின் திரைக்கதை வடிவம் தான். ஆனால் படத்தின் கதை என்பது வேறு. அதை சொல்லிவிட்டால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் அதை சொல்லவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+