X
வட சென்னை

வட சென்னை

Action | 17 Oct 2018 | A | 166 Mins
Tamil

2.6 /5 Users

3 /5 Filmibeat

வட சென்னை கதை

வட சென்னை தமிழில் வெளிவரவிருக்கும் வெற்றிமாறனின் இயக்கத்தில், தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா ஜெறேமியா நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் ரௌடியாகவும், ஆண்ட்ரியா ஒரு விலை மாது பெண்ணாகவும், இவர்களுடன் கருணாஸ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சந்தோஷ் நாராயணன். கதை :  1987ம் ஆண்டில் இருந்து படம் தொடங்குகிறது. சமுத்திரகனி, கிஷோர், பவன், தீனா ஆகிய நான்கு பேரும் மட்ட (கொலை) செய்த கையோடு ஒரு ஓட்டலில் அமர்ந்து பேசுகிறார்கள். கிஷோரின் திட்டப்படி சமுத்திரகனியும், பவனும் சிறைக்கு செல்கிறார்கள். கிஷோர் அவர்களை ஜாமீனில் எடுக்கத் தவறுவதால், நால்வர் அணி இரு கோஷ்டிகளாக பிரிகிறது. இதையடுத்து கதை 2000வது ஆண்டுக்கு முன்னகர்கிறது. கேரம்போர்டு ப்ளேயரான அன்பு (தனுஷ்) சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை போட்டுதள்ள பவனின் கோஷ்டி துடிக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, எதிர் கோஷ்டியான கிஷோரிடம் அடைக்கலம் ஆகிறார். தனுஷ் யார், அவர் ஏன் சிறைக்கு வருகிறார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது படம். மேலே சொன்னவை வடசென்னை படத்தின் திரைக்கதை வடிவம் தான். ஆனால் படத்தின் கதை என்பது வேறு. அதை சொல்லிவிட்டால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் போய்விடும் என்பதால் அதை சொல்லவில்லை.
Read More

வட சென்னை நடிகர்கள் & படக்குழுவினர்

வட சென்னை அணியின் தகவல்

இயக்குனர் வெற்றிமாறன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பாளர் சுபாஸ்கரன், வெற்றிமாறன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வட சென்னை விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
திரைக்கதை அமைப்பதில் தான் ஒரு வல்லவர் என்பதை நிரூபித்திருக்கிறார் வெற்றிமாறன். முதல் பாதி முழுவதும் முன்னுக்கு பின்னாக காட்சிகள் நகர்கின்றன. இடைவேளை வரை கதாபாத்திரங்களின் அறிமுகமே நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமாக கதை சொல்லப்படுகிறது. இதனால் முதல் பாதி வரை படத்துடன் ஒன்ற முடியவில்லை. ஆனால் இரண்டாம் பாதி அதை அப்படியே புரட்டிப்போட்டு, திரையில் இருந்து கண்களை அகலவிடாமல் செய்கிறது. அதுவும் அமீர் வரும் காட்சிகள் செம மாஸ். வெற்றிமாறனின் மனதில் வடசென்னையின் பிம்பம் எப்படி பதிந்திருக்கிறது என்பதை இந்தப் படம் உணர்த்துகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அநாயசமாக கெட்டவார்த்தை பேசுகிறது. ஆண், பெண் என்ற விதிவிலக்கெல்லாம் இல்லை. வடசென்னை என்றாலே குப்பம், அடிதடி, சண்டை, ரவுடியிசம், கெட்டவார்த்தை என காட்டியிருப்பது ஏன் வெற்றிமாறன். அதுவும் படத்தில் வரும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை தவிர மற்றவர்கள் எல்லோரும் தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசுகிறார்கள். அதேபோல், ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களின் மரணங்களைப் பதிவு செய்துள்ள இயக்குநர், ஆனால் அப்போது ஏற்படும் கலவரங்களில் வடசென்னை மக்கள் கடைகளைச் சூறையாடுவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். வடசென்னை மக்கள் பற்றி இப்படியான பிம்பம் சரிதானா?, தேவைதானா? முதலில் சொன்னது போல், தனது திறமையான திரைக்கதையால், இப்படி எந்த கேள்வியும் எழாதபடி பார்த்துகொள்கிறார் வெற்றிமாறன். இந்த படம் சொல்லும் செய்தி, வடசென்னை மக்கள் ரவுடியிசம் செய்வது தங்களுடைய நிலத்துக்கான போராட்டம் என்பதாகவே புரிந்துகொள்ள முடிகிறது. 'இந்த பொண்ண உண்மையிலேயே காசி மேட்லருந்து புட்சிக்கின்னு வந்திங்களாடானு' ஆச்சர்யப்பட வைக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எடுத்த எடுப்பிலேயே கெட்ட வார்த்தை பேசி, தனுஷுக்கு லிப்லாக் கொடுத்து என அவரும் தன் பங்குக்கு அட்ராசிட்டி செய்கிறார். படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் அமீர். சமுத்திரகனிக்குகூட வடசென்னை பாஷை நான்சிங்கில் இருக்கிறது. ஆனால் அமீர் அச்சு அசலாக பொருந்துகிறார். ராஜன் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு நியாயம் செய்திருக்கிறார். துரோகம், வன்மம், ரவுடியிசம், கத்தி, துப்பாக்கி, வெடிகுண்டு என ரத்தம் சொட்டச் சொட்ட வந்து நிற்கிறது வடசென்னை. இயக்குனர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணி மேலும் ஒரு வெற்றிக்கனியை பறித்திருக்கிறது.

வட சென்னை செய்திகள்

வட சென்னை திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

வட சென்னை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+