ரெடியா இருங்க.. தேதி குறிச்சாச்சு.. சிம்பு - வெற்றி மாறன் படம்.. புரோமோ ரிலீஸ் தேதியைச் சொன்ன கலைப்புலி தாணு!
சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் படத்தின் அப்டேட் என்றால் அது வெற்றி மாறன் மற்றும் சிம்பு படத்தின் அப்டேட்டைக் கூறலாம். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, சிம்பு நடிக்க வெற்றி மாறன் இந்த படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகிறார். இப்படி இருக்கும்போது இந்த படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்க, படத்தின் புரோமோ எப்போது ரிலீஸ் என்ற தகவலை தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். அதுவும் இந்த அறிவிப்பை அவர் தனது ஸ்டைலில் அறிவித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளார்.

இந்த படத்தின் புரோமோ சில மாதங்களுக்கு முன்னர் படமாக்கப்பட்டது. இந்த படமும் வெற்றி மாறன் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான வட சென்னை படமும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் நடைபெறும் கதை என்று வெற்றி மாறன் ஏற்கனவே தெரிவித்தார். இன்னும் படத்தின் பெயர் அறிவிக்காததால், ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். இந்நிலையில் படத்தின் புரோமோவை வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளது என தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'வடசென்னை' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய இந்தத் திரைப்படத்தைத் தனுஷே தயாரித்திருந்தார். பலரும் இதன் இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அது 2026-ல் தொடங்கி 2027-ல் வெளியாகும் என தனுஷ் தெரிவித்திருக்கிறார். தனுஷ் மற்றும் வெற்றி மாறன் எங்கு சென்றாலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவரும் இந்த தகவலைத் தெரிவித்து வருகிறார்கள்.
இதே காலகட்டத்தில், வடசென்னை உலகத்தை ஒட்டிய மற்றொரு கதையை இயக்குநர் வெற்றிமாறன் உருவாக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், படத்தின் ப்ரோமோ வீடியோவும் படக்குழுவினரால் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. ப்ரோமோ வீடியோதான் வரும் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படி இருக்கும்போது நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் தனுஷ் மற்றும் சிம்பு சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் எல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications