வடசென்னை யுனிவர்ஸில் என்ட்ரி கொடுக்கும் அனிருத்.. தனுஷுக்காக இல்லை.. அதுதான் ஹைலைட்!
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வட சென்னை. இந்த படத்தை வெற்றி மாறன் கதை, திரைக்கதை எழுதி இயக்கினார். தனுஷ் நடித்தது மட்டும் இல்லாமல் படத்தை தயாரிக்கவும் செய்தார். இப்படி இருக்கும்போது, ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு எடுக்கவுள்ளதாகவும், அதாவது 2026 ஆம் ஆண்டு எடுக்க உள்ளதாகவும் 2027ஆம் ஆண்டு வெளியாகும் என்றும் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இப்படி இருக்கும்போது இயக்குநர் வெற்றிமாறன் வட சென்னை படத்தின் காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல மற்றொரு கதையை உருவாக்கி அதில் சிம்புவை நடிக்க வைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் சொல்லப்போனால் படத்தின் ப்ரோமோவை படக்குழு எடுத்து முடித்துள்ளது. முதலில் வட சென்னை படத்தையே சிம்புவுக்கு தான், தான் எழுதியதாகவும், கதை கேட்ட தனுஷ் தான் நடிப்பதாக சொன்னதால் அவரை வைத்தே படத்தை எடுத்தேன் என்றும் தெரிவித்தார். இப்படி இருக்கும்போது, சிம்புவுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த கதை வட சென்னை படத்தின் யுனிவர்ஸில் வருகிறது என்று வெற்றிமாறன் சில மேடைகளில் பகிர்ந்து கொண்டார்.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. முதலில் வெற்றி மாறனும் சிம்புவும் இணைகிறார்கள் என்று சொன்னதுமே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி விட்டது. அதுவும் தயாரிப்பாளராக கலைப்புலி எஸ் தாணு என்றதும், திரையுலகில் முடிவு செய்து கொண்டார்கள், இந்த படம் கன்ஃபார்ம் ஹிட் என்று. தாணுவைப் பொருத்தவரையில் நல்ல படம் என்றால் எந்த எல்லைக்கும் செல்லக் கூடிய தயாரிப்பாளர். அப்படியான தயாரிப்பாளர் உள்ளார் என்றால் சொல்லவா வேண்டும் என்று பேசி வருகிறார்கள்.
அப்டேட்: படத்தின் கிளிம்ஸ் வீடியோ சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படி இருக்கும்போது, இந்த படத்தின் ப்ரோமோ வரும் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்று படக்குழு சார்பில் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ப்ரோமோ வரும் அக்டோபர் 4ஆம் தேதி தான் ரிலீஸ் என்றாலும் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று திரையுலகில் வேகமாக பரவி வருகிறது. அதாவது இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று கூறப்படுகிறது.

சர்ச்சை பாடல்: இதற்கு முன்னர் சிம்புவும் அனிருத்தும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றியது கிடையாது. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய பீப் பாடல் பெரிய சர்ச்சையாக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் முதன் முதலாக இருவரும் இணைந்து இந்த படத்தில் பணியாற்றவுள்ளார்கள். இந்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











