twitter

    வெள்ளை யானை கதை

    வெள்ளை யானை இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, ஆத்மியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். வினோத் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் இயக்குனர் சுப்ரமணியம் சிவா, வெள்ளை யானை திரைப்படத்தினை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நிலையை பற்றி ஒரு சமுதாய அக்கறை உடைய திரைக்கதையாக எழுதி, திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் உருவாக்கியுள்ளார்.



    இப்படம் உருவாகி 2019ஆம் ஆண்டு வெளியாகவிருந்த நிலையில் கொரோன நோய் தொற்று காரணமாக தமிழகம் மற்றும் இந்திய திரையரங்குகள் மூடப்பட்டன. பின்னர் இத்திரைப்படம் 2021 ஜூலை 11ல் சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

    திரையரங்குகளில் வெளியாகாமல், ஆன்லைன் ஓடிடி தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு இத்திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் பெற்றுள்ளது.

    வெள்ளை யானை திரைப்படத்தின் கதை

    கதைக்கரு: கிராமத்து விவசாயி சமுத்திரக்கனி வெளியுலக அனுபவம் எதுவும் இல்லாமல், விவசாயத்தின் அனுபவத்தை கொண்டு தனது கிராமத்தில் விவசாயம் செய்து கௌரவமாக வாழ்கிறார். விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் தரக்கூடிய வங்கி கடன்களை வாங்கும் சமுத்திரக்கனி மற்றும் அவரது ஊர்க்காரர்கள், வங்கியின் மோசடியில் சிக்கி ஏமாறுகிறார்கள். பின் அதனை எதிர்த்து சமுத்திரக்கனி எவ்வாறு போராடுகிறார் என்பதே திரைப்படத்தின் கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie வெள்ளை யானை with us? Please send it to us ([email protected]).