வெள்ளைப்பூக்கள் இயக்குனர் விவேக் இளங்கோவன் இயக்கத்தில் பத்மஸ்ரீ விவேக் நடிக்கும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ராம்கோபால் கிருஷ்ணராஜூ இசையமைக்கிறார்.
இப்படத்தின் பிரஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா சிவகுமார் 2019-ம் ஆண்டு மார்ச் 22-ல் வெளியிட்டுயுள்ளர். மேலும் இப்படத்தில் விவேக் உடன் பூஜா தேவரிய, தேவ், சார்லீ பேகீ ஹெண்டர்சன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
கதைச்சுருக்கம்
சில மர்ம கொலைகளும், குற்றவாளியை கண்டுபிடிக்க ஒரு ஓய்வுப் பெற்ற போலீஸ் அதிகாரி செய்யும் துப்பறியும் வேலைகளும் தான் வெள்ளைப் பூக்கள் திரைப்படத்தின் ஒன்லைன்.
கதை
ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரியான விவேக்கை, அவரது துப்பறியும் திறமைக்காக காவல்துறை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் வசிக்கும் விவேக்கின் மகன் தேவ், அந்நாட்டைச் சேர்ந்த ஆலிஸ் எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் கோபமடையும் விவேக் மகனுடன் மூன்று ஆண்டுகளாக பேசாமல் இருக்கிறார்.
இந்நிலையில்தான் ஒரு போலீஸ் நண்பர் விவேக்கை அமெரிக்கா சென்றுவர கட்டாயப்படுத்துகிறார். அந்த கட்டாயத்தின் பேரில், அமெரிக்காவின் சியாட்டல் நகருக்கு செல்கிறார் விவேக். மகனுடன் சமாதானம் ஆனாலும், மருமகள் மீது கோபத்தை தொடர்கிறார் விவேக். ஆலிஸ் வலிய வந்து பேசினாலும், அவருடன் பேசாமல் தவிர்க்கிறார் விவேக்.
இதற்கிடையே அதே ஊரில் மகளுடன் தங்கியிருக்கும் சார்லியை சந்திக்கிறார். அவருடன் விவேக்கிற்கு நட்பு ஏற்படுகிறது. இருவரும் ஊரைச் சுற்றி திரிகிறார்கள். இந்நிலையில், விவேக்கின் பக்கத்து வீட்டு பெண் மோனா மர்மமான முறையில் கடத்தப்படுகிறார். இந்த விவகாரத்தில் விவேக் தானாக தலையிட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். இது அவரது மகனுக்கும் மற்றவர்களுக்கும் பிடிக்கவில்லை.
இருப்பினும் விவேக்கின் போலீஸ் மூளை அவரை அதைப்பற்றியே சிந்திக்க வைக்கிறது. மோனா போலவே வேறொரு சிறுவனும் கடத்தப்படுகிறான். பின்னர் விவேக்கின் மகனே கடத்தப்படுகிறார். இவர்களை கடத்தியது யார்? விவேக் அதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.