twitter

    வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) (2022)(U/A)

    Release date 15 Sep 2022
    genre

    வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) கதை

    வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர். ஐசரி கே கணேஷ் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

    ஒரு அப்பாவி இளைஞன் டான் ஆக மாறும் கதையாக உருவாக்கப்பட்டு இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் சித்தி இட்னானி, ராதிகா சரத்குமார், நீரஜ் மாதவ் என பலர் நடித்துள்ளனர்.

    கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கு பார்ட் 01 - தி கிண்ட்லிங் என பெயரிட்டுள்ளார், இயக்குனர். இப்படம் சிலம்பரசன் திரைவாழ்வில் இவர் நடிக்கும் 47ஆவது (சிம்பு 47) திரைப்படமாகும்.

    இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ'சான்றிதழ் அளித்துள்ளது. வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) திரைப்படம் 2022, செப்டம்பர் 15ல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தினை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க, உலகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

    வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படக்குழு / திரைநட்சத்திரங்கள் தகவல்கள்

    வெந்து தணிந்தது காடு படத்தின் புகைப்படங்கள்

    வெந்து தணிந்தது காடு படத்தில் டிரெய்லர், பாடல்கள் என வீடியோக்கள்

    வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் கதை

    கதைக்கரு

    முத்துவீரன் (சிலம்பரசன்) தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர். சொந்த ஊரில் இருந்து மும்பைக்கு பிழைக்க வரும் இவரை சுத்தி பல விஷயங்கள் நடக்கிறது. அதில் இவர் ரௌடி கும்பலிடம் தப்ப முடியாமல் மாட்டி கொள்கிறார், அதனை இவர் எப்படி சமாளித்து கடந்து வந்தார் என்பதே இப்படத்தின் கதை.

    கதை

    திருநெல்வேலியில் உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் கருவக்குளம் எனும் ஊரில் நன்கு படித்து முடித்து விட்டு குடும்ப சூழல் காரணமாக முள் காட்டில் வேலை செய்யும் இளைஞனாக வரும் முத்துவை எப்படியாவது நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என அவரது அம்மா நினைத்து ஒரு அண்ணாச்சியிடம் உதவி கேட்க, அந்த அண்ணாச்சிக்கு ஏற்படும் பிரச்சனை காரணமாக மும்பை செல்லும் முத்து அங்கே பரோட்டா கடையில் வேலை பார்க்கிறார். 

    தன்னுடன் தங்கி இருப்பவர்களை சிலர் கொல்வதை பார்த்து ஊரில் இருந்து தான் கொண்டு வந்த துப்பாக்கியை எடுத்து சுடும் நேரத்தில் கேங்ஸ்டராக மாறும் முத்து எப்படி முத்து பாய் ஆகி மும்பையையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் என்பதை ஆர்ப்பாட்டம் இல்லாமல், யதார்த்த காட்சிகளுடன் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

    வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) - பிரத்யேக தகவல்கள்

    2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் கவுதம் - சிலம்பரசன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருந்தது. ஆனால் படத்தில் திரைக்கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு படக்குழுவிற்கே திருப்தியாக இலாததால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.

    ஆனால் இதே கூட்டணியில் மீண்டும் முதலிருந்து ஒரு கதையை தொடங்கி படமாக்கியுள்ளனர், படக்குழுவினர். வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தின் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையில், பாடலாசிரியர் தாமரை பாடல் வரிகளில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் உருவானது.

    முதலில் இப்படத்தினை ஒரே பாகமா படமாக்க முயற்சித்த படக்குழு பின்னர், இரண்டு பாகங்களாக திட்டமிட்டு இயக்கியுள்ளனர். வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) என முதல் பாகத்தினை 2022 செப்டம்பர் 15ல் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, அடுத்து சிம்புவின் பத்து தல படத்திற்கு பின் மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்க உள்ளது.

    இப்படத்திற்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற தலைப்பு பொருத்தப்பட்டிருந்தது. பின் இப்படம் அதிரடி திரைக்கதையில் முக்கியத்துவமா அமைந்ததால் மகாகவி சுப்ரமணிய பாரதியின் கவிதைகளில் ஒன்றான 'அக்னி குஞ்சொன்று கண்டேன்' என டைட்டில் பதிவு செய்தனர்.

    அனால் 2021 ஆகஸ்ட் 6ல் இப்படத்தினை வெந்து தணிந்தது காடு என்ற தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர், படக்குழுவினர். இப்படத்தினை திரைக்கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார்.

    வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) படத்தில் இடம் பெற்றுள்ள திரைப்பாடல்கள் காலத்துக்கும் நீ வேணும், முத்து ஜௌர்னி, மறக்குமா நெஞ்சம் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    ஓடிடி

    வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) படத்தின் ஆன்லைன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் பெற்றுள்ளது.

    **Note:Hey! Would you like to share the story of the movie வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்) with us? Please send it to us ([email protected]).