twitter

    வெண்ணிலா கபடி குழு 2 கதை

    வெண்ணிலா கபடி குழு 2 இயக்குனர் செல்வா சேகரன் இயக்கத்தில் இராண்டாம் பாகமாக உருவான விளையாட்டு சம்மந்தமான திரைப்படம். இத்திரைப்படத்தில் விக்ராந்த், சூரி, கிஷோர், அர்த்தனா பின்னு, பசுபதி மற்றும் பலர் நடித்த்துள்ளனர். இப்படத்திற்கு செல்வகணேஷ் இசையமைத்துள்ளார்.

    கதை
    விக்ராந்த்தின் தந்தை பசுபதி ஒரு அரசு பேருந்து ஓட்டுனர். கபடி பிரியரான அவர் எந்த ஊரில் கபடி போட்டி நடந்தாலும் அரசு பஸ்சை எடுத்துக் கொண்டு போய்விடுவார். அப்படி ஒருமுறை செய்யும் போது, கையும் களவுமாக மாட்டி வேலையை இழக்கிறார். இதனால் விக்ராந்த்துக்கு தந்தை மீது கடும் கோபம். பசுபதியை கடுமையாக திட்டுகிறார். 

    அப்போது தான் அவரது அம்மா மூலமாக தெரிகிறது, பசுபதி ஒரு முன்னாள் கபடி வீரர் என்பது. தனக்காக அந்த விளையாட்டையே தூக்கிப்போட்ட தந்தைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு எடுக்கிறார் விக்ராந்த். பசுபதியின் சொந்த ஊரான கணக்கன்பட்டிக்கு சென்று வெண்ணிலா கபடிக்குழுவில் இணைந்து கபடி போட்டியில் ஜெயித்து கோப்பை வெல்ல சபதம் ஏற்கிறார். அவரது சபதம் என்ன ஆகிறது என்பது தான் மீதிப்படம்.

    **Note:Hey! Would you like to share the story of the movie வெண்ணிலா கபடி குழு 2 with us? Please send it to us ([email protected]).