X
தமிழ் » திரைப்படங்கள் » வெண்ணிலா கபடி குழு 2
வெண்ணிலா கபடி குழு 2

வெண்ணிலா கபடி குழு 2

Drama | Sports | 12 Jul 2019 | U | 122 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

வெண்ணிலா கபடி குழு 2 கதை

வெண்ணிலா கபடி குழு 2 இயக்குனர் செல்வா சேகரன் இயக்கத்தில் இராண்டாம் பாகமாக உருவான விளையாட்டு சம்மந்தமான திரைப்படம். இத்திரைப்படத்தில் விக்ராந்த், சூரி, கிஷோர், அர்த்தனா பின்னு, பசுபதி மற்றும் பலர் நடித்த்துள்ளனர். இப்படத்திற்கு செல்வகணேஷ் இசையமைத்துள்ளார். கதை விக்ராந்த்தின் தந்தை பசுபதி ஒரு அரசு பேருந்து ஓட்டுனர். கபடி பிரியரான அவர் எந்த ஊரில் கபடி போட்டி நடந்தாலும் அரசு பஸ்சை எடுத்துக் கொண்டு போய்விடுவார். அப்படி ஒருமுறை செய்யும் போது, கையும் களவுமாக மாட்டி வேலையை இழக்கிறார். இதனால் விக்ராந்த்துக்கு தந்தை மீது கடும் கோபம். பசுபதியை கடுமையாக திட்டுகிறார்.  அப்போது தான் அவரது அம்மா மூலமாக தெரிகிறது, பசுபதி ஒரு முன்னாள் கபடி வீரர் என்பது. தனக்காக அந்த விளையாட்டையே தூக்கிப்போட்ட தந்தைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு எடுக்கிறார் விக்ராந்த். பசுபதியின் சொந்த ஊரான கணக்கன்பட்டிக்கு சென்று வெண்ணிலா கபடிக்குழுவில் இணைந்து கபடி போட்டியில் ஜெயித்து கோப்பை வெல்ல சபதம் ஏற்கிறார். அவரது சபதம் என்ன ஆகிறது என்பது தான் மீதிப்படம்.
Read More

வெண்ணிலா கபடி குழு 2 நடிகர்கள் & படக்குழுவினர்

வெண்ணிலா கபடி குழு 2 அணியின் தகவல்

இயக்குனர் செல்வா சேகரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை செல்வகணேஷ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

வெண்ணிலா கபடி குழு 2 விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே படம் விறுவிறுப்பாக இருக்கிறது. முதல் பாதி படத்தில் ஏனோதானோவென நகர்கிறது. தேவையில்லாத காதல் காட்சிகள், பாடல்கள் என செம போரிங். அதுவும் காமெடி என்ற பெயரில் கஞ்சா கருப்பு செய்யும் அலப்பறைகள், நமக்கு கோபத்தை தான் வரவழைக்கிறது. இரண்டாம் பாதியில் கபடி மேட்சும், சூரியின் காமெடியும் கொஞ்சம் மனநிம்மதி தருகிறது. ஆனால் கறிக்குழம்பு காமெடி சிரிப்பை வரவைத்தாலும், அருவருப்பின் உச்சம். க்ளைமாக்ஸ் காட்சியில் யாரையாவது சாகடிக்க வேண்டும் எனும் செண்டிமெண்டுக்காக ஒருவரை பலிகடாவாக்கி இருக்கிறார்கள். விஷ்ணு விஷால், சூரி உள்பட முதல் பாகத்தில் நடித்த அனைவருக்கும் பெரிய அடையாளத்தை கொடுத்த படம் வெண்ணிலா கபடிக்குழு. ஆனால் இந்த படம் யாருக்கும் அடையாளத்தை ஏற்படுத்தி தருவதற்கு வாய்ப்பில்லை.

வெண்ணிலா கபடி குழு 2 திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

வெண்ணிலா கபடி குழு 2

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+