வெற்றி இயக்குனர் அஞ்சன அலி கான் இயக்கத்தில் 'பிக் பாஸ்' புகழ் முகேன் ராவ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
பிக் பாஸ் சிசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று வெற்றி பெற்ற திரு. முகேன் ராவ், தமிழில் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார். 2018-ஆம் ஆண்டின் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.