விமானம் - இயக்குனர் சிவ பிரசாத் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மீரா ஜாஸ்மின் என பலர் நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை கிரண் கோரப்பட்டி மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் சரண் அர்ஜுன் இசையமைத்துள்ளார்.
ஒரு குடும்ப கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் விவேக் கலேபு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் மார்த்தாண்ட கே வெங்கடேஷ் எடிட்டிங் செய்துள்ளார்.
விமானம் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 ஜூன் 09ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.