விண்வெளி பயணக் குறிப்புகள் அறிமுக இயக்குனர் ஜெயப்பிரகாஷ், படத்தை எழுதி, இயக்கியது மட்டுமல்லாமல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு அனைத்தையும் தானே செய்து மேலும் படத்தை தானே இயக்கியுள்ளார். அத்விக் ஜலந்தர், பூஜா ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை :
ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சண்டியர் துரைபாண்டி. இவருக்கு விண்வெளிக்கு போக வேண்டும் என்று ஆசை வருகிறுது. அதற்கு சுமார் 25 கோடி ரூபாய் வரை செலவாகும் என்பதால், ஊரில் உள்ள பணக்கார மனிதர்களை மிரட்டி பணம்பறிக்க முயல்கிறார். 'யாருயா இவன்... கோமாளித்தனமா விண்வெளி போறேன்னு சொல்லி பணம் பிடுங்க பார்க்கிறான்னு...' கடுப்பாகும் ஊர் பெரிசுகள், துரைபாண்டியை போட்டுத்தள்ள திட்டமிடுகிறார்கள். துரைபாண்டி கொல்லப்பட்டாரா இல்லை அவரது விண்வெளி டூர் லட்சியத்தில் வெற்றி பெற்றாரா என்பதை ஆடம்பரம் இல்லாமல் அசால்டாக சொல்கிறது விண்வெளி பயணக் குறிப்புகள்.