ஜாம்பி இயக்குனர் புவன் நுல்லன் இயக்கத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், அன்புதாசன், கோபி, சுதாகர் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் வசந்த் மற்றும் முத்துக்குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.
கதை
ஜாம்பி தாக்கப்பட்ட மனிதர்கள் சிலரிடம் மாட்டிக் கொள்ளும் சிலர் எப்படி அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார்கள் என்பது தான் ஜாம்பி படத்தின் கதைக்களம்.
சுதாகர், கோபி அரவிந்த், அன்புதாசன் இவர்கள் மூவரும் நண்பர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதேதோ மன அழுத்தம். அதற்காக ஒரு பாரில் மது குடிக்க வருகிறார்கள். அப்போது அவர்களுக்கு டி.எம்.கார்த்தி மற்றும் பிஜிலி ரமேஷின் அறிமுகம் கிடைக்கிறது. பாரில் ஏற்படும் ரகளையைத் தொடர்ந்து ஐந்து பேரும் ஒரு காரில் ஒரு ரிசார்ட்டுக்கு செல்கிறார்கள்.
இதற்கிடையே அந்த ஏரியா டான் ஆன யோகி பாபுவின் போனை, பார் சண்டையில் நைசாக திருடி வருகிறார் பிஜிலி ரமேஷ். எனவே, போனைத் தேடி யோகி பாபுவும் அந்த ரிசார்ட்டுக்கு வருகிறார். அதே ரிசார்ட்டில் மருத்துவக் கல்லூரி மாணவியான யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது தோழிகள் ஆகியோரும் தங்கி இருக்கின்றனர்.
அந்த ரிசார்ட்டில் ஜாம்பி தாக்குதலுக்கு சிலர் ஆளாகிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப் பிழைக்க இப்போ மேலே சொல்லப்பட்டவர்கள் படம் முழுவதும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தப்பித்தார்களா..? இல்லை ஜாம்பியிடம் மாட்டிக் கொண்டார்களா என்பது தான் மீதிப்படம்.